ARTICLE AD BOX
மும்மொழி கொள்கையில் திமுக, பாஜக கட்சிகள் நாடகமாடுகிறது என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நேற்று தனது கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசி இருந்தார். மேலும், ஆளும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தனது குரலையும் பதிவு செய்திருந்தார்.
திமுக தரப்பு பதில் தாக்கு
இந்நிலையில், இந்த விஷயத்திற்கு திமுக தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், திமுக அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அரியலூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் விஜயின் பேச்சு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: அசிங்கமா கண்டக்டர் திட்டுறாரு.. புகார் சொன்ன மாணவன்.. அதிரடி காட்டிய அமைச்சர் சிவசங்கர்.!
விஜய்க்கு பதில் சொல்ல வேண்டுமா?
இந்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், "அதன் வீரியம் தெரிந்தவர்கள் தான் அதனைப்பற்றி பேச வேண்டும். வீரியம் தெரியாதவர்களுக்கு நாம் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை" என பேசினார்.
இதையும் படிங்க: அதிமுக - தவெக கூட்டணி பேச்சுவார்த்தை? அரசியலில் யாரும் எதிர்பாராத தகவல் லீக்.!