ARTICLE AD BOX
சென்னை: அனில் வி.நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள படம், ‘வீரவணக்கம்’. இதில் சமுத்திரக்கனி, பரத், தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமி நடித்துள்ளனர். சுதந்திரப் போராட்ட வீராங்கனையும், புரட்சிப் பாடகியுமான 95 வயதான பி.கே.மேதினி அம்மா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான பி.கிருஷ்ணபிள்ளையின் வீர வாழ்க்கை வரலாறு மற்றும் பெரியாரின் வாழ்க்கை தத்துவங்கள் இணைந்த இப்படம் தமிழர்களுக்கும், மலையாளிகளுக்கும் நல்லதொரு திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்று படக்குழு கூறியுள்ளது.
மலையாளத்தில் அனில் வி.நாகேந்திரன் எழுதி இயக்கிய ‘வசந்தத்தின்டே கனல்வழிகளில்’ என்ற படத்தின் 2வது பாகமாக ‘வீரவணக்கம்’ உருவாகியுள்ளது. முதல் பாகம் போல், மீண்டும் பி.கிருஷ்ணபிள்ளை வேடத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். எம்.கே.அர்ஜூனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஆகியோர் இசை அமைத்துள்ளனர். டி.எம்.சவுந்தர்ராஜன் மகன் டி.எம்.எஸ்.செல்வகுமார் பாடியுள்ளார்.