"வீட்ல இருந்த பெண்ணை தூக்கிக் கொண்டு போயா.." - செய்தியாளர் சந்திப்பில் சீமான் பரபரப்பு பேச்சு!

5 hours ago
ARTICLE AD BOX
Published on: 
28 Feb 2025, 9:58 am

செய்தியாளர்: சே.விவேகானந்தன்

தருமபுரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் அக்கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு முன்பு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்...

பெரியார், சீமான்
பெரியார், சீமான்pt web

சம்மனை எனக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பியிருக்கலாம்:

சம்மனை கையில் கொடுக்காமல், ஏன் ஓட்ட வேண்டும். காவல்துறை வருவதற்கு முன்னாடியே மீடியா வருகிறது. வளசரவாக்கம் காவல்துறை விசாரணை செய்கிறது. ஆனால், நீலாங்கரை காவல் ஆய்வாளர் எதுக்காக வந்து அடித்து இழுத்துச் சென்றார். நான் ஓசூரில் இருக்கிறேன். எனக்கு வாட்ஸ்-அப் அனுப்பியிருக்கலாம். சம்மன் ஒட்டிய தகவல் எனக்கு கிடைத்து விட்டது. எதிலும் சரியாக இல்லை. ஆனால் இதில் உடனே நீதி வாங்கி கொடுக்கணும்.

சீமான்
அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது.... மறுத்த உயர்நீதிமன்றம்!

கூட்டணி அமைக்காமல் திமுகவால தனித்து நிற்க முடியுமா?

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், நடந்ததற்கு என்ன செய்கிறீர்கள். என்ன பாலியல் வழக்கு யாரு அந்த பெண், விசாரணை செய்யணுமில்லை. வீட்ல இருந்த பெண்ணை, சோளக்காட்டில் தூக்கிக் கொண்டு போய், கற்பழித்த மாதிரி, கல்லூரியில் படித்த பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று கற்பழித்த மாதிரி.

என்னை சமாளிக்க முடியல, நான் வெறும் நடிகனாக இருந்தால், இந்த வழக்கை முடித்திருப்பீங்கா. நான் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை. தொகுதிக்கு 10 ஆயிரம் ஓட்டு வாங்க முடியுமா? உன்னால் தனியா நிற்க முடியுமா? 2026 தேர்தலில் நீயும் நானும் தனியா சந்திக்கலாம், நீங்க ஆட்சி செய்தீர்கள். நான் வரல, நீங்க செய்த சாதனையைச் சொல்லி ஓட்டு கேட்டு வாங்குங்க பார்க்கலாம்.

எனக்கு வசதியான நேரத்தில் தான் ஆஜராவேன்:

தம்பி ஆம்ஸ்ட்ராங் கொலையில் என்ன செய்தீர்கள். துப்பாக்கிச் சூடு செய்தீர்கள். பாலியல் குற்றவாளி ஞானசேகரன். யார் அந்த சார், என்ன செய்தீர்கள். மொழிப்போர் தியாகிகளை சுட்டுக் கொல்லுங்க என்று சொன்னவர் பெரியார். ஓட்டுக்காக அர்ப்ப நாடகம் போடுறீங்க. எனக்கு வசதியான நேரத்தில் தான் ஆஜராவேன். எனக்கு 8-ம் தேதி வரை வேலை இருக்கு.

காவல் நிலையத்திற்கு விரும்பினால் போவேன். அதையேதான் சொல்வேன். இன்று மாலை 6 மணி ஆகும், உறுதியாக செல்வேன்.

சீமான்
தொகுதி மறுவரையறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் - எடப்பாடி பழனிசாமி

ஓராண்டில் 7 முறை கருக்கலைப்பு செய்த சாதனையாளர் நான் தான்:

திருமணம் ஆகிடுச்சி, ஏழுமுறை கருக்கலைப்பு செய்தீர்கள் என்று சொல்றாங்க. ஓராண்டில் 7 முறை கருக்கலைப்பு செய்த சாதனையாளர் நான் தான். திருமணம் ஆனது என்று சொன்னால், எனக்கு திருமணம் ஆகும் போது தடுத்திருக்கலாம், புகைப்படத்தைக் காட்டியிருக்கலாம்.

நான் பணம் கொடுத்ததாக கூறுவது, கஷ்டத்தை சொன்னதால், தம்பிகள் கொடுத்திருக்கலாம். அந்த ஆடியோவை நீங்க கேட்டால் கூட, பணம் கொடுப்பீர்கள். ஈரோடு காவல்துறை கொடுக்கும் சம்மனை வாங்கிக் கொள்வேன். ஒரு பயமும் இல்லை.

காவல்துறை என்னை பார்க்கத் துடிக்கிறது. என்னை எதிர்க்கிறயா, என்ன பண்றேன் பாரு என வழக்கு போடுகிறார்கள். இந்த அதிகாரம், உங்களுக்கே சொந்தமில்லை. சாலச்சக்கரம் சுழலும்.

cm stalin
cm stalinpt desk

தாய் மொழியை படிக்காமல், உயர் கல்வி வரை படிக்க முடியும் என்றால், அது தமிழ்நாட்டில் தான்:

தமிழ்நாட்டில் தமிழ் படிக்க எல்லா இடத்திலும் வாய்ப்பிருக்கா, அப்படி இருக்கும்போது, இந்தியை எப்படி படிக்க முடியும். ஒரே வரி, ஒரே ரேசன் கார்டு என எல்லாம் வருது. ஆனால், தண்ணீர் மட்டும் வர மாட்டேங்குது. இந்தி படித்தால், தண்ணீர் வரும் என்றால், நாங்கள் இந்தி படிக்கிறோம். தாய் மொழியை படிக்காமல், உயர் கல்வி வரை படிக்க முடியும் என்றால், அது தமிழ்நாட்டில் தான். விசிக இல்லாமல் தேர்தல் நகர்வு இருக்காது என்பது ஏற்புடையது தான். விசிக வால் தான் திமுக வெற்றி பெற்றது. அவருடைய பலம், அவரை விட, எனக்குத் தெரியும். திருமாவை, தாழ்த்தப்பட்டவர் என நினைக்காமல், தமிழனாக மக்கள் பார்த்திருந்தால், தமிழகத்திற்கு அவர் ஒரு நல்ல தலைவராக இருப்பார்.

சீமான்
" எடப்பாடி எப்படி ஏமாற்றிக்கொண்டிருக்கிறாரோ.."- டங்க் ஸ்லிப்பான திண்டுக்கல் சீனிவாசன்

ஐஏஎஸ், டாக்டர் என எது படித்தாலும் பெரியார் படிக்க வைத்தார் என சொல்றீங்க, எத்தனை மெடிக்கல் காலேஜ் திறந்து வைத்தார்:

பெரியாரை நான் விமர்சிக்கவில்லை. ஆனால், நான் என் பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் சொல்லிக்கொடுக்க வேண்டும். எல்லா மொழியிலும் சூத்திரன் இருக்கான். ஆனால், தமிழன் மட்டும் சூத்திரனா? வேசி மகன் என்று திட்டிட்டான் என, என்னை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வது ஏன்? என் மொழியை பேசிட்டு, எழுதிட்டு, எங்களைப் பற்றி ஏன் பேசுறீங்க. என் மீது எத்தனை வழக்கு போடுவீங்க. போடுங்க. இந்த திராவிட மாடலை, இத்துப் போன திராவிடம், பெரியாரை இத்தோடு நிறுத்திக் கொள்ளவும். யார் என்ன படித்தாலும் பெரியார் காரணமாம். ஐஏஎஸ், டாக்டர் என எது படித்தாலும் பெரியார் படிக்க வைத்தார் என சொல்றீங்க, எத்தனை மெடிக்கல் காலேஜ் திறந்து வைத்தார். கல்விக்காக காமராஜர் மடியேந்தி திறந்து வைத்தவர்” என்று சீமான் கேள்வி எழுப்பினார்

Read Entire Article