ARTICLE AD BOX
சென்னையில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணி செய்ய சூப்பரான வாய்ப்பை ஐடி நிறுவனம் வழங்கி உள்ளது. இந்த பணிக்கு பணி அனுபவம் இல்லாதவர்கள் கூட விண்ணப்பம் செய்யலாம்…
பல ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை தற்போது மீண்டும் அலுவலகம் வரவழைத்து வேலை வாங்கி வருகின்றன. சில நிறுவனங்கள் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே அலுவலகம் வராமல் பணி செய்ய வாய்ப்பு வழங்குகின்றன. வெகுசில நிறுவனங்கள் மட்டுமே வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்கின்றன..
Qulitim ஐடி நிறுவனத்தில் தற்போது QA engineer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 4 ஆண்டு வரை Maual Testing பிரிவில் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் பணி அனுபவம் இல்லாமல் குறிப்பிட்ட திறமை உள்ளவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
அதன்படி விண்ணப்பம் செய்வோருக்கு test plans and cases கிரியேட் செய்து எக்ஸிக்யூட் செய்ய தெரிந்திருக்க வேண்டும். எஸ்டிஎல்சி (SDLC), எஸ்டிஎல்சி (STLC), defect lifecycle உள்ளிட்டவற்றில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும். Smoke, Sanity, Intergration, Regression உள்ளிட்டவற்றில் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும்.Agile பிரேம்வொர்க்ஸ் மற்றும் ரிகிரிஷன் டெஸ்ட்டிங் (Regression Testing) தெரிந்திருந்தால் விண்ணப்பம் செய்வோருக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமையும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே பணி செய்யலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது வழங்கப்படும்…
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்..!!