ARTICLE AD BOX
பெண்களுக்கு இருக்கும் பல கவலைகளில் பெரும் கவலை சருமம் சோர்வடைந்து இருப்பதுதான். என்னதான் குளித்தாலும் வெளியில் அடிக்கும் வெயிலுக்கு முகம் வாடத்தான் செய்கிறது. அழகாக ஜொலிக்க யாருக்கு தான் ஆசையிருக்காது. ஒருவருடைய முகம் உடனடியாக பொலிவு மற்றும் ஜொலிப்பு தன்மை பெற, அதிக அளவு பணம் செலவு செய்து பேசியல் செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நம் இதை எளிதாக செய்ய முடியும். தினசரி நாம் குளிக்க பயன்படுத்தும் சோப்பிலேயே இந்த பொருட்களை சேர்த்தால் போதும், முக அழகுடன் சேர்ந்து உடலும் பொலிவு பெறும்.
டானிங்கை குறைப்பதில் முக்கிய பங்கு உளுந்துக்கும், உருளைக்கிழங்குக்கும் உண்டு. பொதுவாகவே உளுத்தம் மாவையும், உருளை கிழங்கையும் முகத்தில் தடவினால் ஒரு மணி நேரத்திலேயே நல்ல ரிசல்டை பார்க்க முடியும். அந்த அளவிற்கு இந்த 2 பொருட்களுக்கும் பவர் உண்டு என்றே சொல்லலாம். இப்போ இந்த 2 பொருட்களை வைத்து சோப் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
*சோப் பேஸ் (soap base)
*உளுத்தம் பருப்பு
*உருளைக்கிழங்கு
முதலில் உளுத்தம் பருப்பை 3 மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ள வேண்டும். மேலும் உருளைக்கிழங்குகளை தோல் நீக்கி சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ள வேண்டும். இதையடுத்து ஊறவைத்தை உளுந்தை முதலில் மாவு பதத்தில் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு அதே மிக்ஸி ஜாரில் உருளைகிழங்குகளையும் அரைத்து எடுத்து இரண்டையும் பேஸ்ட் பதத்தில் மிக்ஸ் செய்து வைத்து கொள்ளுங்கள்.
இதையடுத்து ஒரு வானலியில் தண்ணீரை சூடு செய்து சோப் பேஸை அதில் உருக வைத்து விட வேண்டும். இதனை தொடர்ந்து அதில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் அரைத்து வைத்த பேஸ்ட் இரண்டையும் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். அந்த சுடு தண்ணீரில் இந்த அனைத்தும் ஒன்றாக சேர்ந்து ஒரு கொதி வரும். இதையடுத்து அதை ஆற வைத்து சோப் என்ன வடிவத்தில் வேண்டுமோ அதில் ஊற்றி வைத்து விட வேண்டும். (குறிப்பு: சோப் பேஸ் மற்றும் சோப் அச்சு கடைகளிலேயே கிடைக்கும்)
அவ்வளவு தான் அந்த பேஸ்ட் காய்ந்து மோல்டாக மாறிவிட்டால் சோப் தயாராகி விடும். இதை தினம் தோறும் பயன்படுத்தி வர, உங்களின் முகம் மட்டுமின்றி உடலும் பளபளப்பாகிவிடும்.