வீட்டிலேயே செய்யலாம் மணக்க மணக்க இறால் வடை ரெசிபி இதோ இருக்கே..!!

4 days ago
ARTICLE AD BOX

கடல் உணவில் இறால் ஒரு அற்புதமான உணவாகும். இதில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. பல வகை புற்றுநோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும் சக்தியும் கொண்டது.

இதில் பல வகையான வைட்டமின்கள் உள்ளன. இறாலை சிறுவர்கள் சாப்பட்டு வந்தால் அவர்களின் மூளை வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் ஞாபக சக்திக்கும் வழி வகுக்கும். இதில் பல வகை உணவுகள் செய்வார்கள்.

இதில் வறுவல், தொக்கு, பிரியாணி, கிரேவி போன்ற பல வகை உணவுகள் செய்வார்கள். ஆனால் இன்றைய பதிவில் இதை வைத்து நாம் எவ்வாறு வடை செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் இறால்
  • கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
  • 1 ஸ்பூன் மிளகாய் பொடி
  • அரை ஸ்பூன் மல்லிப் பொடி
  • அரை ஸ்பூன் கரம் மசாலா
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு 1 கப்
  • கடலை பருப்பு 1 ஸ்பூன்
  • சீரகம் அரை ஸ்பூன்
  • சோம்பு 9
  • சின்ன வெங்காயம்
  • 1 கொத்து கருவேப்பில்லை
  • 4 பூண்டு
  • 1 பெரிய வெங்காயம்
  • பொறிக்கும் அளவு எண்ணெய்

செய்யும் முறை

இறால் வடை செய்வதற்கு முதலில் இறாலை சின்ன சின்னதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதன் பின்னர் இதில் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறிக்கொள்ள வேண்டும்.

இதை அரை மணி நேரம் ஊற வைத்து கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும். இதன் பின்னர் மிக்ஸியில் அரை மணி நேரம் ஊறவைத்த கடலை பருப்பு, சீரகம், வெங்காயம், கருவேப்பிலை, பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும்.

தொடர்ந்து இதில் இறால், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வடை போல் தட்டி பொறித்து எடுத்தால் மணக்க மணக்க சுவையான இறால் வடை தயார். இந்த வடையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

பிடிக்காதவர்கள் ஒத்துவராதவர்கள்  முடிந்தவரை  இதை சாப்பிடாமல் தவிர்த்து கொள்ளலாம். ஆரோக்கியமில்லாத ரோட்டுக்கடையில் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டிலேயே செய்யலாம்.

Read Entire Article