ARTICLE AD BOX
வீடுகளில் விளக்கை எந்த திசை நோக்கி ஏற்ற வேண்டும்? பஞ்ச தீப எண்ணெயில் ஏற்றலாமா?
சென்னை: வீடுகளில் விளக்கேற்றுவது என்பது அவசியமானதொன்று! வீட்டில் எந்த திசை நோக்கி விளக்கை ஏற்றி வைப்பது நல்லது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து சமூகவலைதள பதிவில் தீபா தங்கராசு கூறியிருப்பதாவது: மகாலட்சுமியின் அருள்பெற.. விளக்கேற்ற தவறாதீர்கள்..!!*

ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை பிரகாசிக்கச் செய்யும். தினசரி விளக்கேற்றும் வீட்டில் அன்னை மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும். வீட்டை தூய்மைப்படுத்தி நீங்கள் விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருளுவதாக ஐதீகம்.
தீபங்களை நாம் ஏற்றுவதால் தெய்வங்கள் நம் கர்ம வினைகளை நீக்கி நல்ல பலன்களை தருகின்றன.
வீட்டில் விளக்கை எந்த திசை நோக்கி ஏற்றி வைப்பது நல்லது?
விளக்கினை கிழக்கு, வடக்கு திசை நோக்கி ஏற்றலாம். மேற்கும், தெற்கும் விளக்கு ஏற்ற சரியான திசை அல்ல.
இறந்தவர்களுக்கு கர்மா செய்யும்போது குறிப்பிட்ட அந்த நாட்களில் மட்டும்தான் தெற்கு திசையை நோக்கி விளக்கினை ஏற்ற வேண்டும். மற்றபடி தெற்கு திசையை நோக்கி நம் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது.
தீபத்தை எப்போது ஏற்ற வேண்டும்?
வாசல் தெளித்து கோலமிட்ட பின்புதான் பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும்.
பூஜை அறையில் தீபத்தை ஏற்றி விட்டு, பின்பு அந்த தீபத்திலிருந்து மற்றொரு தீபத்தை ஏற்றிக் கொண்டு அதன்மூலம் வாசலில் உள்ள தீபத்தை ஏற்ற வேண்டும்.
வீட்டில் பூஜை அறையில் எத்தனை தீபங்கள் ஏற்றலாம்?
தினந்தோறும் நம் வீட்டில் ஒரு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால் போதுமானது.
அம்பாள் அல்லது ஸ்ரீ சக்கரத்தை வீட்டில் வைத்து பூஜை செய்பவர்கள், பூஜை அறையின் வலது புறம் பசு நெய் தீபமும், இடது புறம் நல்லெண்ணெய் தீபமும் ஏற்றி வைக்க வேண்டும்.
எந்த திரியை கொண்டு விளக்கு ஏற்றலாம்?
பருத்தியால் ஆன பஞ்சுத்திரி அல்லது தாமரை தண்டு திரி கொண்டு வீட்டிலும், கோவில்களிலும் விளக்கு ஏற்றலாம். அதிலும் தாமரை தண்டினாலான திரியில் ஏற்றும் விளக்கிற்கு அதிக பலன் உண்டு.
விளக்கின் திரி எத்தனை இதழ்களில் இருக்க வேண்டும்?
திரியானது ஒன்று, இரண்டு, மூன்று என்ற எந்த கணக்கில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
மேலும் தீபம் அணையாமல் எரியும் அளவிற்கு திரியினை போடவேண்டும். அதில் எந்த கட்டுப்பாடும் இல்லை.
விளக்கேற்ற சிறந்த எண்ணெய் எது?
சுத்தமான பசு நெய், நல்லெண்ணெய் இவைகளை கொண்டு நம் வீட்டில் விளக்கினை ஏற்றலாம். இதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் ஏராளமாக இருக்கும். ஆனால் நெய்யையும், நல்லெண்ணையையும் கலந்து விளக்கினை ஏற்றக்கூடாது.
பஞ்சதீப எண்ணெயில் விளக்கு ஏற்றுவது சரியா?
வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசுநெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்தும் கலந்ததுதான் பஞ்சதீப எண்ணெய். இந்த எண்ணெய்களை தனித்தனியாக கொண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும். மாறாக ஐந்து எண்ணெயையும் ஒன்றாக கலந்து கொண்டு விளக்கு ஏற்றுதல் தவறு.
ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணெய் கலந்து தீபம் ஏற்றுவது சாஸ்திரப்படி சரியானது அல்ல. கூட்டு எண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் இவற்றில் கட்டாயம் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது.
வேப்ப எண்ணெயை கொண்டு விளக்கு ஏற்றும்போது அதை வீட்டின் நுழைவாயில் மாடத்தில் வைக்க வேண்டுமே தவிர வீட்டிற்குள் வைக்கக் கூடாது.
நம் வீட்டில் சாந்தமான தெய்வங்களை மட்டும் வைத்து வழிபடுகின்றோம். ஆனால் ஆலயங்களில் சாந்தமான தெய்வம், உக்கிரமான தெய்வம் இரண்டையும் சேர்த்து வழிபடுவோம். ஆகையால் விளக்கு ஏற்றுவதில் சிறு வேறுபாடு உள்ளது. ஆலயங்களில் நெய், நல்லெண்ணெய், இலுப்பெண்ணெய் இவைகளில் விளக்கு ஏற்றலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- சனிப் பெயர்ச்சி: வம்சமே காலி.. மறந்தும் ‘இந்த’ விசயத்தை செய்யாதீங்க! சனி பகவானை கோபமாக்கும் செயல்கள்
- பீரோவில் இதை மட்டும் வைக்காதீங்க.. தங்க நகை, பணம் அதிகமாக சேரணுமா? பீரோவுக்குள் இந்த பொருள் வையுங்க
- வீட்டில் புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணர் படம் வைத்திருக்கலாமா? அதிசயத்தை ஏற்படுத்தும் ஒரு பொருள்!
- சிவனுக்கு ஒரு சகோதரி இருந்தாராமே! பார்வதிதான் அவரை விரட்டினாரா? கைலாயத்திலும் நாத்தனார் பிரச்சினையா?
- முருகன் எங்க வீட்டு மருமகன்.. வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம்! பழனியை தெறிக்க விட்ட குறவர் இன மக்கள்!
- மாதவிடாய் நாட்களில் பெண்கள் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினால் பட்டு போகுமா?
- சீனாவிடமிருந்து வந்த நல்ல செய்தி.. இனி தங்கம் விலை "இப்படி" தான்! ஒரே போடாக போட்ட ஆனந்த் சீனிவாசன்
- நிலம், வீடு வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி.. கிரைய பத்திரம், பட்டா வேணுமா? இந்த தேதியை நோட் பண்ணுங்க
- திருப்பூரில் மகனுடன் சாப்பிட்ட மாலா.. அடுத்த நொடி நடந்த சம்பவம்.. அதிர்ந்து போன அக்கம் பக்கம்
- சொல்லித் தான் பாருங்க பார்ப்போம்..! வரி தர முடியாது என்றால் 356 பாயும்.. திமுகவை மிரட்டும் பாஜக.!
- அப்பா ஆகப் போகிறார் பிக்பாஸ் ஷாரிக்.. குழந்தை குறித்து உருக்கமாக வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்து
- முட்டுக்கட்டையா போடுறீங்க? அமெரிக்காவை கழற்றிவிடும் இந்தியா? ரஷ்யாவுடன் சேர்ந்து செய்யும் சம்பவம்