வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிய சிலுவைபுரம் கிராம மக்கள்!

21 hours ago
ARTICLE AD BOX

சிதம்பரம்: சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி குடியரசு நாளை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையும் படிக்க: சூடான்: மருத்துவமனையில் பயங்கரவாத தாக்குதல் - 70 பேர் பலி!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் ஒன்றியம் சிலுவைபுரம் கிராம மக்கள், பல்வேறு வருவாய் கோட்டத்தில் உள்ள பகுதிகளில் ரேஷன் பொருள்கள் வாங்க ஓரு இடத்திற்கும், வாக்களிக்க வேறு கிராமத்திற்கும், வேறு பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரை தேடிச் செல்லும் நிலை உள்ளதாக அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் சிலுவைபுரம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.

Read Entire Article