‘விவாகரத்து வதந்தி வலியைக் கொடுத்ததது’ – நடிகர் ஆதி

3 hours ago
ARTICLE AD BOX

யூ டியூப் சேனலில் வந்த விவாகரத்து வதந்தி வலியைக் கொடுத்ததாக நடிகர் ஆதி கூறியுள்ளார்.

தமிழில் 'மிருகம்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஆதி நடிகை நிக்கி கல்ரானியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்.

ஈரம் பட இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி நாயகனாக நடித்துள்ள சப்தம் படம் நாளை மறுதினம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்திற்காக பல பேட்டிகளைக் கொடுத்துள்ளார் ஆதி. அதில் ஒன்றில் "நிக்கியுடனான எனது திருமண வாழ்க்கை இனிமையாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் சில சமயங்களில் ஆதாரமில்லாமல் விவாகரத்து வதந்திகளை சில யூடியூப் சேனல்கள் பரப்புவது வலியைத் தருகிறது.

காதலிப்பதற்கு முன்பும், திருமணமாகி கணவன், பூனைவி ஆன பின்னும் நானும் நிக்கியும் நல்ல நண்பர்கள். எங்கள் இதயத்தால் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். இப்படியான வதந்திகள் பரவும் போது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. முதலில் இது எனக்கு வருத்தமாக இருந்தது. போகப் போக, வருமானத்திற்காக சில யூடியூப் சேனல்கள் இப்படி செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அவற்றை கண்டு கொள்வதில்லை." என்று கூறியுள்ளார்

Read Entire Article