விவாகரத்து பெற்ற சஹலின் மனைவி 60 கோடி கேட்டு டார்ச்சர் செய்தாரா…? வெளியான பரபரப்பு பின்னணி..!!

18 hours ago
ARTICLE AD BOX

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்  யுஜ்வேந்திர சஹாலுக்கும் மும்பையைச் சேர்ந்த பல் மருத்துவர் மற்றும் நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மாவுக்கும் 2020 ஆம் வருடம் திருமணம் நடந்தது. இப்படி இரண்டு வருடங்கள் திருமண வாழ்க்கையில் சுமுகமாக சென்று நிலையில் கடந்த 2022 ஆம் வருடத்தின் இறுதியில் திடீரென்று தனஸ்ரீ வர்மா சமூக ஊடகத்தில் தன்னுடைய பெயருக்கு பின்னால்  சஹல் என்ற பெயரை நீக்கினார். இதனால் இருவருக்கும் இடையே விரிசல் இருப்பது முதல் முறையாக வெளிச்சத்திற்கு வந்தது.

இதனையடுத்து தற்போது இவர்கள் இருவரும் நீதிமன்றத்திற்கு சென்று விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். இருவரும் ஒரு வருடத்திற்கு மேல் பிரிந்து வாழ்வதாகவும் இதனை கருத்தில் கொண்டு விவாகரத்து கொடுத்துவிட்டதாகவும் வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விவகாரத்தை பெற்ற சஹலிடம்  தனஸ்ரீ வர்மா 60 கோடி ஜீவனாம்சம் கேட்டு தொடர்ந்து டார்ச்சர் செய்வதாக கூறப்பட்டது.

அதன் பிறகு தனஸ்ரீ வர்மாவை பலரும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார்கள். இந்த நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட தனஸ்ரீ வர்மாவின் குடும்பத்தார், “எந்த அடிப்படையில் இப்படி செய்தி வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்பாக அதை உறுதி செய்திருக்க வேண்டும். நாங்கள் ஜீவனாம்சம் கேட்கவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.

Read Entire Article