ARTICLE AD BOX

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக ஏழை விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளில் ஒரு வருடத்திற்கு மட்டுமே 6000 ரூபாய் வரை உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறும் நிலையில், இதுவரை 18 தவணைகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விவசாயிகள் அடுத்த தவணைக்காக காத்திருக்கிறார்கள்.
அடுத்த தவணையை பிப்ரவரி 24 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வங்கிக்கணக்கில் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தவணை பணமானது விவசாயம் மற்றும் பிற தேவைகளுக்கு உதவும். இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.