ARTICLE AD BOX
விழுப்புரம்
விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் அருகே தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த வங்கியில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிகின்றனர்.
இந்நிலையில் இன்று வங்கியின் மெயின் பிரேக்கர் சுவிட்ச் பகுதியில் திடீரென புகை வரத்துடங்கியது. இதனையடுத்து அங்கு தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடனடியாக தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது பரபரப்பான சூழல் நிலவியது.
இதையடுத்து இந்த விபத்தானது மின்கசிவால் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :