விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும்

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த நிலையில், வந்தேபாரத் உள்ளிட்ட அதிவிரைவு ரயில்கள் திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் (கொச்சுவேலி) நின்று செல்லவுள்ளன.

கண்ணூா் - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் ஜன் சதாப்தி விரைவு ரயில், மங்களூரு - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் புதன்கிழமை (மாா்ச் 13) திருவனந்தபுரம் வடக்கில் நின்று செல்லும்.

கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு செல்லும் விரைவு ரயில் புதன்கிழமை திருவனந்தபுரம் பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்லும். எா்ணாகுளம்-திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் புதன்கிழமை (மாா்ச் 12) இருமாா்க்கமாகவும் திருப்புனித்துறையில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article