விரைவில் ‘தக் லைஃப்’ முதல் பாடல் ரிலீஸ்…. இந்த தேதியில் தானா?

5 hours ago
ARTICLE AD BOX

தக் லைஃப் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசனின் நடிப்பிலும் தயாரிப்பிலும் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் தக் லைஃப். இந்த படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். ஏற்கனவே இவர்களின் கூட்டணி நாயகன் படத்தில் இணைந்திருந்த நிலையில் தற்போது பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தக் லைஃப் படத்தில் இணைந்திருக்கிறது. இந்த படத்தில் கமல்ஹாசனு டன் இணைந்து சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் திரிஷா, கெளதம் கார்த்திக், அசோக் செல்வன், ஐஷ்வர்யா லக்ஷ்மி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில் தக் லைஃப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகளும் நிறைவடைந்து படமானது 2025 ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் நேற்று (மார்ச் 21) இந்த படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தின் முதல் பாடல் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் அல்லது ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. விரைவில் முதல் பாடல் ரிலீஸ் குறித்த தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article