ARTICLE AD BOX
பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதங்கள் விரைவில் குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "ஜிஎஸ்டி வரி அடுக்குகளையும் விரி விகிதங்களை சீரமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஜிஎஸ்டி விகிதங்களில் ஏற்கெனவே பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. 2017 ஜூலை 1ஆம் தேதி ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டபோது ஆர்.என்.ஆர். எனப்படும் வருவாய் நடுநிலை விகிதம் (Revenue Neutral Rate) 1.5.8% ஆக இருந்தது. இது 2023ஆம் ஆண்டில் 11.4% ஆகக் குறைந்துள்ளது. வரவிருக்கும் வரி விகிதக் குறைப்புப் பிறகு இது இன்னும் குறையும்" என்றார்.
மேலும், "ஜிஎஸ்டியில் உள்ள முக்கியமான சிக்கல்கள், வரி விகித குறைப்பு, வரி அடுக்கு குறைப்பு ஆகியவற்றில் அனைத்து மாநிலங்களும் ஒருமித்த கருத்தை எட்டும் முயற்சியில் இருக்கிறோம். அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி சீரமைப்பைத் தாக்கல் செய்யும் வகையில் பணிபுரிந்து வருகிறோம்" எனவும் தெரிவித்தார்.
ரூ.7,000 கோடி சொத்து... கோவை தொழிலதிபரின் சக்ஸஸ் சீக்ரெட் இதுதான்!
பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை குறைப்பது குறித்து சீதாராமன் கூறுகையில், பொது பங்குகளை அதிகரிக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றார். "பொதுத்துறை வங்கிகளில் அதிக சில்லறை முதலீட்டாளர்களை நாங்கள் விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.
ஜிஎஸ்டி விகிதங்களில் திருத்தம் செய்யவும், வரி அடுக்குகளில் மாற்றங்களை முன்மொழியவும் செப்டம்பர் 2021 இல் நிதியமைச்சர் சீதாராமன் தலைமையில் மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் ஆறு மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் உள்ளனர். இந்தக் குழு ஜிஎஸ்டி கட்டமைப்பை எளிமையாக்கும் சீர்திருத்தங்களையும் பரிந்துரை செய்யும்.
சில நிமிடங்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்! இந்த ஐடியா ட்ரை பண்ணுங்க!