விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்! 

3 hours ago
ARTICLE AD BOX
Waqf Board - Parliament session

டெல்லி : வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய மக்களால் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆகும். இந்த சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாய் இஸ்லாமிய மக்கள் நலனுக்கு பயன்படுத்தபடுகிறது என கூறப்படுகிறது.

இந்த வக்பு வாரிய விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு ஒரு குழுவை (JPC) கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நியமனம் செய்தது. இந்த குழுவில் பாஜக மற்றும் NDA கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 16 எம்.பி.க்களும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 10 எம்.பி.க்களும் இருந்தனர். இந்த குழு கடந்த ஆண்டு நவம்பர் மாதமே திருத்தங்களை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

பிறகு விரிவான ஆய்வு மேற்கொண்டு மொத்தம் 66 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. இதில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. பிறகு இறுதியாக 22 திருத்தங்கள் இறுதி செய்யப்பட்டு, அதில் 14 திருத்தங்கள் மட்டும் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பிப்ரவரி 13ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இது மத ரீதியில் சிறுபான்மையினர் உரிமையில் தலையிடுவதாக உள்ளது என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். வக்பு திருத்த சட்டத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இப்படியான சூழலில், தற்போது நாடாளுமன்ற கூட்டு குழு தாக்கல் செய்த வக்பு வாரிய திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதாவானது வரும் மார்ச் 10ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய திருத்தங்கள் :

ஒவ்வொரு வக்பு வாரியத்திலும் 2 இஸ்லாம் மதத்தை சாராதவர்கள் மற்றும் பெண்களுக்கு வக்பு வாரியத்தில் இருக்க வேண்டும் என்றும், தனமாக வழங்கப்பட்ட குறிப்பிட்ட சொத்து வக்பு வாரியத்தை சேர்ந்ததா என்பதை ஆய்வு செய்ய ஒரு மாநில அரசின் அதிகாரி ஒருவர் அதனை உறுதிப்படுத்த வேண்டும் இவ்வாறு பல்வேறு திருத்தங்கள் வக்பு வாரிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Read Entire Article