விராட் கோலியின் சீருடையும் 18  ஐபிஎல் சீசனும் 18..! - இம்முறையாவது ஆர்சிபி-க்கு கோப்பை கிட்டுமா?

9 hours ago
ARTICLE AD BOX

Published : 16 Mar 2025 12:12 PM
Last Updated : 16 Mar 2025 12:12 PM

விராட் கோலியின் சீருடையும் 18  ஐபிஎல் சீசனும் 18..! - இம்முறையாவது ஆர்சிபி-க்கு கோப்பை கிட்டுமா?

<?php // } ?>

ஐபிஎல் வரலாற்றில் 17 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் அணிகளுள் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரும் (ஆர்சிபி) ஒன்று. நட்சத்திர பட்டாளங்கள், அதிரடி பேட்ஸ்மேன்கள் படை என ஒவ்வொரு சீசனிலும் குதூகலமாக அந்த அணி களம் கண்ட போதிலும் சாம்பியன் கோப்பையை வெல்வது என்பது அந்த அணிக்கு கானல் நீராகவே உள்ளது. எனினும் இம்முறை 18-வது சீசனில் புத்தெழுச்சியுடன் களமிறங்குகிறது ஆர்சிபி. புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.

நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி அணியும் சீருடையின் எண் 18, இந்த சீசனும் 18. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் போட்டி தொடங்குவதற்கு முன்னரே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘இ சாலா கப் நம்தே’ என்ற வாசகத்தை கடந்த சில சீசன்களில் முன்னிலைப்படுத்திய ஆர்சிபி இம்முறை அதை அடைவதற்காக கூடுதல் உத்வேகத்துடன் செயல்படக்கூடும். ரஜத் பட்டிதார் தலைமையின் கீழ் மெகா ஏலத்தின் போது அணிக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது.

கடந்த சீசனில் ஆர்சிபி அணி லீக் சுற்றில் முதல் 8 ஆட்டங்களில் 7 தோல்விகளை சந்தித்து கடும் நெருக்கடியில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் வியக்க வைக்கும் வகையில் கடைசி 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்து இருந்தது. இதில் சிஎஸ்கே அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் பெற்ற ‘த்ரில்’ வெற்றியும் அடங்கும்.

இந்த சீசனில் ஆர்சிபி அணியின் உரிமையாளர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சை பலப்படுத்தி உள்ளனர். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட், அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர் குமார் ஆகியோரை அணிக்குள் கொண்டு வந்துள்ளது. இவர்கள் இருவருமே இறுதிக்கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்துவீசும் திறன் கொண்டவர்கள்.

மேலும், இடதுகை வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளும் பலம் சேர்க்கக்கூடியவர். பேட்டிங்கில் ஐசிசி டி20 தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் இங்கிலாந்தின் பில் சால்ட் பலம் சேர்க்கக்கூடும். கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங்கில் தொடக்க வரிசையில் பில் சால்ட் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். அதே செயல் திறனை அவர், மீண்டும் வெளிப்படுத்தக்கூடும். மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மாவும் அணிக்கு பலம் சேர்க்கக்கூடியவராக திகழ்கிறார்.

இது ஒருபுறம் இருக்க இந்த சீசன் விராட் கோலிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக்கூடும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறந்த பார்மில் இருந்த அவர், இம்முறை ஆர்சிபி அணியின் சாம்பியன் பட்டம் வெல்லும் கனவு மெய்ப்பட உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும்.

பெங்களூரு படை: ரஜத் பட்டிதார் (கேப்டன்), விராட் கோலி, டிம் டேவிட், பில் சால்ட், ஸ்வஸ்திக் சிகாரா, தேவ்தத் படிக்கல், ஜிதேஷ் ஷர்மா, ஜேக்கப் பெத்தேல், மனோஜ் பண்டேஜ், லியாம் லிவிங்ஸ்டன், மோஹித் ராதி, கிருனல் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், ரசிக் தார், சுயாஷ் சர்மா, ஸ்வப்னில் சிங், நுவான் துஷாரா, அபிநந்தன் சிங், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், லுங்கி நிகிடி.

தங்கியவர்கள்: விராட் கோலி (ரூ.21 கோடி), ரஜத் பட்டிதார் (ரூ.11 கோடி), யாஷ் தயாள் (ரூ.5 கோடி).

வெளியேறியவர்கள்: கிளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், டூ பிளெஸ்ஸிஸ், கேமரூன் கிரீன்.

மோதல் விவரம்

  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மார்ச் 22 | கொல்கத்தா | இரவு 7:30
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - மார்ச் 28 | சென்னை | இரவு 7:30
  • குஜராத் டைட்டன்ஸ் - ஏப்ரல் 2 | பெங்களூரு | இரவு 7:30
  • மும்பை இந்தியன்ஸ் - ஏப்ரல் 7 | வான்கடே | இரவு 7:30
  • டெல்லி கேபிடல்ஸ் - ஏப்ரல் 10 | பெங்களூரு | இரவு 7:30
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - ஏப்ரல் 13 | ஜெய்ப்பூர் | பிற்பகல் 3:30
  • பஞ்சாப் கிங்ஸ் - ஏப்ரல் 18 | பெங்களூரு | இரவு 7:30
  • பஞ்சாப் கிங்ஸ் - ஏப்ரல் 20 | முலான்பூர் | பிற்பகல் 3:30
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - ஏப்ரல் 24 | பெங்களூரு | இரவு 7:30
  • டெல்லி கேபிடல்ஸ் - ஏப்ரல் 27 | டெல்லி | இரவு 7:30
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - மே 3 | பெங்களூரு | இரவு 7:30
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - மே 9 | லக்னோ | இரவு 7:30
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மே 13 | பெங்களூரு | இரவு 7:30
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மே 17 | பெங்களூரு | இரவு 7:30

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article