விராட் கோலிக்கு காலில் ஏற்பட்ட பிரச்சனை… பயிற்சியின் போது நடந்தது என்ன?

2 days ago
ARTICLE AD BOX

விராட் கோலிக்கு காலில் ஏற்பட்ட பிரச்சனை… பயிற்சியின் போது நடந்தது என்ன?

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலிக்கு மோசமான ஆண்டுகளாக அமைந்து வருகின்றன. அதிலும் கோலி போன்ற ஒருவர், ரன் மெஷினாக உலகக் கிரிக்கெட்டைக் கலக்கிய ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக தடுமாறி வருவது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. சமீபத்தில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் கூட கோலி சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறி அவுட்டானார்.

இதையடுத்து இன்று நடக்கவுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் அவரின் பங்களிப்பை இந்திய ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டிக்காக அவர் மற்ற வீரர்களை விட கூடுதலாக பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

நேற்றைய பயிற்சியின் போது அவர் திடீரென மைதானத்தை விட்டு வெளியேறி பெவிலியன் சென்று கணுக்கால் பகுதியில் ஐஸ்பேக் ஒத்தடம் கொடுத்துள்ளார். சிறிது ஓய்வுக்குப் பின்னர் அவர் மீண்டும் வந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவருக்கு இன்னும் கணுக்கால் பிரச்சனை முழுவதும் சரியாகவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
Read Entire Article