ARTICLE AD BOX
போக்குவரத்து முறையின் வேகத்தை அதிகரிக்க சென்னையில் கடந்த வருடம் தயாரான நாட்டின் முதல் ஹைப்பர்லூப் சோதனை ட்ராக் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. இந்த ட்ராக்கில் ரயில் மணிக்கு அதிகபட்சம் 1200 கி.மீ வேகத்தில் செல்ல முடியும். இது வெற்றிகரமாக அமைந்தால், உதாரணமாக டெல்லி-ஜெய்ப்பூர் இடையேயான 300 கி.மீ தூரத்தை 30 நிமிடங்களில் அடையலாம். ஐஐடி மெட்ராஸின் உதவியுடன் ரயில்வே துறை 422 மீ நீளமுள்ள ஹைப்பர்லூப் (ரயில் செல்லும் சுரங்கப்பாதை போன்ற பைப்பில் உள்ள பாதை) பாதையை உருவாக்கியுள்ளது.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
இது பயணத்திற்கு மேலும் வேகம் தரும். இது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமூக வலைத்தளமான எக்ஸில் தகவல் பகிர்ந்துள்ளார். ‘அரசாங்கம் மற்றும் ஐஐடியின் இந்த செயல்பாடு எதிர்காலத்தில் போக்குவரத்து துறையில் புதுமையை முன்னெடுத்துச் செல்லும்’ என்று கூறியுள்ளார்.
ஹைப்பர்லூப் ட்ராக் என்றால் என்ன?:
5வது போக்குவரத்து முறை என்று அழைக்கப்படும் ஹைப்பர்லூப் தொலைதூர பயணத்திற்காக ஒரு அதிவேக போக்குவரத்து அமைப்பு ஆகும். இது ரயில்களின் வெற்றிட குழாய்களில் சிறப்பு காப்ஸ்யூல்கள் மூலம் அதிவேகமாக பயணிக்க அனுமதிக்கிறது. இதில் விமானத்தை விட 2 மடங்கு வேகத்தில் செல்ல முடியும். குறைந்த மின்சார பயன்பாடு மற்றும் 24 மணி நேரமும் இயங்கும் திறனைக் கொண்டுள்ளது.
இந்த வங்கியில் யாரும் பணம் எடுக்கவோ.. டெபாசிட் செய்யவோ முடியாது.. ரிசர்வ் வங்கி உத்தரவு
பத்தாம் வகுப்பு படித்தால் போதும்! கோவை ஜிஎஸ்டி அலுவலகத்தில் மாதம் ரூ.57,000 சம்பளத்தில் வேலை!
ஓயோ ரூம்ஸ் அதிகம் முன்பதிவு செய்யப்படும் நகரம் எது.? தமிழ்நாடும் லிஸ்டில் இருக்கா.?