ARTICLE AD BOX
Vimal Om Kali Jai Kali Teaser: வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தில் மிரட்டி வரும் நடிகர் விமல் தற்போது காளி அவதாரம் எடுத்திருக்கிறார். விமலின் இந்த சக்திவாய்ந்த காளி அவதாரம் கதைக்கு பெரும் பலம் சேர்த்து கதையின் தீவிரத்தை அதிகமாக்கியுள்ளது. அநீதிக்கும் நீதிக்கும் இடையிலான இந்த பயணத்தில் அவரது இந்த காளி அவதாரம் ரசிகர்களை நிச்சயம் கவரும்.
ஆக்ஷன், பழிவாங்குதல் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் 'ஓம் காளி ஜெய் காளி' அமைந்துள்ளது.குலசேகரபட்டினத்தில் நடந்த தசரா திருவிழாவில் இந்தக் கதை படமாக்கப்பட்டுள்ளது கதை மீதான நம்பகத்தன்மையை இன்னும் அதிகரிக்கிறது. கொண்டாட்டங்களின் பிரமாண்டமும், காளி நடனமும் கதைக்களத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 'ஓம் காளி ஜெய் காளி' ஜியோஹாட்ஸ்டாரில் மட்டும் ஒளிபரப்பாகும்.நடிகர்கள்: விமல், சீமா பிஸ்வாஸ், RS சிவாஜி, GM குமார், குமரவேல், கஞ்சா கருப்பு, புகழ், பாவ்னி, ஷிவின், க்வின்சி மற்றும் பலர் நடித்துள்ளனர்,
தொழில்நுட்ப குழுவில் யாரெல்லாம் உள்ளார்கள்?
கார்த்திக் ராஜா, இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். விஷூவல் எஃபெக்ட் பணியை ஸ்ரீ விஷூவல் எஃபெக்ட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது, விஎஃப்எக்ஸ் பணிகளை ஃபோகஸ் விஎஃப்எக்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. கலரிஸ்ட் பணிகளில் எஸ். மாதேஸ்வரனும், ஆக்ஷன் கொரியோகிராஃபர் வேலையில் கே. ராஜசேகரும் பணியாற்றி இருக்கின்றனர்,ஒலி வடிவமைப்பாளர்களாக சுதர்சனன், அனிதா,
ஆகியோர் பணியாற்றி இருக்கின்றனர். திரைக்கதையில் ராமு செல்லப்பா, குமரவேல் ஆகியோர் பணியாற்றி உள்ளனர். வசனத்தை ராமு செல்லப்பா எழுதியிருக்கிரார். பாடல் வரிகளை மணி அமுதவன் எழுதியிருக்கிறார், தயாரிப்பு வடிவமைப்பாளராக க்ராஃபோர்ட் பணியாற்றி இருக்கிறார்.
மேலும் படிக்க | விஜய் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் புதிய படம்! பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ