விபரீத ராஜ யோகம்.. குரு வக்ர நிவர்த்தியால் துலாம் ராசிக்கு சூப்பர் பலன்

3 hours ago
ARTICLE AD BOX

விபரீத ராஜ யோகம்.. குரு வக்ர நிவர்த்தியால் துலாம் ராசிக்கு சூப்பர் பலன்

Astrology
oi-Pavithra Mani
Subscribe to Oneindia Tamil

குரு வக்ர நிவர்த்தி: 2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது, சுக்கிரன், செவ்வாய், புதன் உள்ளிட்ட முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் உள்ளன. அந்த வகையில் பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி நிகழ உள்ளது. இது துலாம் ராசியில் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை இந்தத் தொகுப்பில் காணலாம்.

குரு தற்போது ரிஷபம் ராசியல் வக்ரமாக வீற்றிருக்கிறார். பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிலையில் இருந்து நிவர்த்தி ஆகி இயல்பு நிலைக்கு திரும்புகிறார். நவ கிரகங்களில் முழு சுப கிரகமாக குரு உள்ளார். குரு தனம், குடும்பம், வாக்கு ஆகியவற்றுக்கு காரகனாக இருக்கிறார். நம் அன்றாட வாழ்க்கையில் குரு பயணிப்பதால் அவரது வக்ர நிவர்த்தி முக்கியத்துவம் வாய்ந்தது.

guru vakra nivarthi thulam

துலாம் ராசிக்கு குரு எட்டாம் இடத்தில் அமர்ந்துள்ளார். எதையுமே பெரிதாக யோசிக்கும் மனப்பான்மை கொண்டவர்கள் நீங்கள். குரு மூன்று மற்றும் ஆறாக்கு அதிபதி. அவர் எட்டாம் இடத்தில் இருந்தால் விபரீத சக்ரவர்த்தி யோகம். நல்ல அமைப்பாக இருந்தாலும் குரு பலம் இழந்ததால் பலன்கள் கிடைத்திருக்காது. குடும்பம், தனம், வாக்கு ஆகிய மூன்றிலுமே நிறைய சிக்கல்களை எதிர் கொண்டிருப்பீர்கள்.

குரு வக்ர நிவர்த்தி அடைவதால் நல்ல பலன்களை அடைவீர்கள். ஆறுக்கு அதிபதி எட்டில் மறைந்திருப்பது விபரீத ராஜ யோகம். குரு எப்போதும் பார்க்கும் இடத்தை நன்றாக வைத்திருப்பார். அதனால் எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். வேலை தொடர்பான தடைகள் நீங்கி, புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லை என்று கவலைப்பட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கைக்கூடும்.

ரத்தம் தொடர்பான பரிசோதனைகளில் வெற்றி கிடைக்கும். கருத்தரித்தல் தொடர்பான சிகிச்சையில் முன்னேற்றம் இருக்கும். விவசாயத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சட்டம் தொடர்பான வழக்கறிஞர் உள்ளிட்ட பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். இசை கலை, சினிமா, ஊடகம் சம்பந்தப்பட்ட தொழில் இருப்போருக்கு பெயர், புகழ் உயர்ந்து பிரபலமடைவார்கள்.

கலைஞர்களுக்கு பணம் வரவு திருப்தியாக இருக்கும். தயாரிப்பாளர்களுக்கு தடைபட்ட சினிமாக்கள் வெளியாகும். மொத்தமாக கலைதுறைக்கு எதிர்பார்த்த, எதிர்பாராத அனைத்து பலன்களும் கிடைக்கும். சித்திரை, ஸ்வாதி நட்சத்திரக்காரர்களுக்கு இந்த காலம் நல்ல லாபத்தை கொடுக்கும். பொருளாதாரம் உயரும். பழைய பைசா பாக்கி வசூலாகும்.

தொழிலில் புதிதாக முயற்சி செய்ய நினைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு, அனிமேஷன், ஐடி துறை சார்ந்தவர்களுக்கும் இந்த காலம் சிறப்பாக இருக்கும். சகோதரர்களிடம் இருந்த பகை நீங்கி ஒற்றுமை வரும். கடன்கள் குறையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

இந்த காலத்தில் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். சுப விரயம் ஏற்படும். திருமணம் நடக்காதவர்களுக்கு திருமணம் ஆகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தாய் வழி சொத்துகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வீடு, வண்டி ஆகியவற்றிலும் எதிர்பார்த்த படி அமைவதற்கான சூழுல் உள்ளது.

கற்பனை வளத்தை மேம்படுத்தி வாய்ப்புகளை பிரகாசப்படுத்துவார். எழுத்தாளர்களுக்கும் இந்த காலம் நன்றாக இருக்கும். மஞ்சள் கிழங்கை வாங்கி அம்மன் கோயிலுக்கும், சுமங்கலி பெண்களுக்கும் தானமாக வழங்கலாம். இதன் மூலம் உங்களுக்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட்டு பண வரவு சிறப்பாக இருக்கும். திருமணம் நிகழ்வுகளில் கலந்து கொண்டு முடிந்த உதவிகளை செய்வதும் உங்களுக்கு பலனளிக்கும்.

More From
Prev
Next
English summary
Guru Vakra Peyarchi to be happen on February 4th. Here we explained Thulam (Libra). Libra will get new chanse. Thier family will be double happy.
Read Entire Article