விண்வெளித் துறையில் பெண்களின் பங்கு அதிகரிப்பு - பிரதமர் மோடி

2 days ago
ARTICLE AD BOX

புதுடெல்லி,

மன் கி பாத் நிகழ்ச்சியின் 119வது அத்தியாயத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் நடந்து வருகிறது. இது தொடர்பாக எல்லா இடங்களிலும் பேசப்படுகிறது. ஆனால் இன்று, நான் உங்கள் அனைவருடனும் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசப் போவதில்லை. மாறாக, விண்வெளி துறையில் இந்தியா அற்புதங்களை செய்து வருகிறது. கடந்த மாதம் இஸ்ரோ 100வது ராக்கெட்டை விண்ணில் ஏவியது. இது பாராட்டுக்குரியது.

விண்வெளிப் பயணத்தில் நமது சாதனைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. விண்வெளித் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. 400க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. மகளிர் தினத்தன்று எனது சமூக வலைதள கணக்குகள் மகளிரிடம் ஒரு நாள் ஒப்படைக்கப்படும். மகளிர் தங்களுடைய பதிவுகளை பகிரலாம்.

சமீபத்தில், ஒரு பெரிய ஏஐ மாநாட்டில் பங்கேற்க பாரிஸ்க்குச் சென்றிருந்தேன். அங்கு, இந்தத் துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தை உலகம் பாராட்டியது விண்வெளி மற்றும் அறிவியலைப் போலவே, இந்தியா ஏ.ஐ., தொழில்நுட்பத்திலும் ஒரு வலுவான அடையாளத்தை பெற உள்ளது.

விண்வெளித் துறையாக இருந்தாலும் சரி, ஏஐ ஆக இருந்தாலும் சரி, நமது இளைஞர்களின் அதிகரித்து வரும் பங்கேற்பு ஒரு புதிய புரட்சியைக் கொண்டு வந்துள்ளது. இளைஞர்களிடையே கவலையை அதிகரிக்கும் விவகாரமாக உடல் பருமன் உள்ளது. தேசிய அறிவியல் தினத்தன்று இளைஞர்கள் அறிவியல் தொடர்பான மையங்களை பார்வையிட வேண்டும். ஒரு நாளாவது விஞ்ஞானியாக இருக்க வேண்டும்.

கர்நாடகாவின் பிஆர்டி புலிகள் காப்பகத்தில், புலிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. புலிகளை கடவுளாக வணங்கும் சோலிகா பழங்குடியினருக்கு இந்த பாராட்டை சேரும். அவர்கள் காரணமாக, இந்த பகுதியில் மனித-விலங்கு மோதல் கிட்டத்தட்ட ஏதும் இல்லை. இதேபோல், குஜராத்தில், கிர் காடுகளில் ஆசிய சிங்கங்களைப் பாதுகாப்பதிலும் பாதுகாப்பதிலும் உள்ளூர் மக்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். காடுகளில் கடந்த சில ஆண்டுகளில் புலிகள், சிறுத்தைகள், ஆசிய சிங்கங்கள், காண்டாமிருகங்கள் மற்றும் சதுப்பு நில மான்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Read Entire Article