விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் வேலை!

13 hours ago
ARTICLE AD BOX

பிரபல வணிக வங்கியான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் காலியாகவுள்ள 124 மூத்த வாடிக்கையாளர் சேவை நிர்வாகி (Senior Customer Service Executive) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து இன்று(மார்ச் 16) க்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விபரம் வருமாறு:

பணி: Senior Customer Service Executive

காலியிடங்கள்: 124

தகுதி: குறைந்து 60 சதவிகிதம் மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 32,000

வயது வரம்பு: 31.01.2025 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் தேர்வு நடைபெறும்.

தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும். தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்படும்.

ராணுவத்தில் வேலை வேண்டுமா? - உடனே இணையவழியில் விண்ணப்பிக்கவும்!

தேர்வு நடைபெறும் சரியான தேதி, இடம் குறித்த விபரங்கள் அழைப்பு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும். அழைப்பு கடிதத்தை வங்கி www.tmbnet.in இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ 1,000 மட்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tmbnet.in/tmb esirp என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 16.03.2025

மேலும் கூடுதல் விபரங்கள் அறிய https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_SCSE_IBP.pdf இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Read Entire Article