'விட்டுக்கொடுத்தால் மகிழ்ச்சி பெறலாம்' - அம்மா அமிர்தானந்தமயி!

6 hours ago
ARTICLE AD BOX

உலகம் முழுவதும் அம்மா அமிர்தானந்தமயி ஒரு மனிதாபிமான மற்றும் ஆன்மீகத் தலைவராக அறியப்படுகிறார். இந்தியாவில் ஒரு குணப்படுத்துபவர் மற்றும் ஞானியாக மதிக்கப்படும் அவர், தனது வாழ்வில் பெரும் பகுதியை மக்களிடம் நேரடியாக சந்தித்து அருளாசி வழங்கி வருகிறார். இந்நிலையில் மதுரை பசுமலையில் உள்ள பிரம்மஸ்தான ஆலயத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு இரண்டு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் நிறைவு நாளான்று பக்தர்களிடம் அவர் பேசியதாவது...

"வாழ்க்கையை கடல், கவிதை, கனவு, நீண்ட துாரம் பயணம் போன்ற பல்வேறு பொருட்களை கொண்டு ஒப்பிடுகின்றனர். ஆனால் பொறுமை, தியாகம், பணிவு, திறந்த மனப்பான்மை, எதையும் ஏற்றுக்கொள்ளும் மனம், இதுவே முதன்மையானது.

வாழ்க்கை நம் சிற்றறிவிற்கு அப்பாற்பட்ட மர்மம். அது எல்லையற்றது என்று முனிவர்கள் போற்றினர். பணிவை வளர்க்க வேண்டும். மற்றவருடைய பொருளை பலவந்தமாக கைப்பற்ற வேண்டும் என நினைத்தல் கூடாது.

ஆற்றில் நீர் குடிக்க குனிகிறோம். அதுபோல இந்த பிரபஞ்சத்தில் வாழ பணிவு அவசியம். இதற்கு தடையாக இருப்பது ஆணவம். ஆணவத்தால் மற்றவரை விட நமக்கு தான் இழப்பு. இந்த உலகில் மனிதன் தவிர அனைத்து உயிர்களும் அதன் விதிமுறைப்படியே வாழ்கிறது. மனிதன் இயற்கை விதிமுறையை பின்பற்றி வாழ வேண்டும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் மகிழ்ச்சி நிலைக்கும்.

குழந்தைகளுக்கு அலைபேசியை கொடுத்து வளர்ப்பது தவறு. இதனால் இளமையிலே கண் மங்கிவிடும், மன அழுத்தம் ஏற்படும். குழந்தைகள் புராணக் கதைகள் கேட்பது, கடவுள் சித்திரங்கள் வரைவது போன்றவற்றால் மனநலம், வலிமை ஏற்படும். அன்பிலே பிறந்து, வளர்ந்து, வாழ்வது மனிதனின் உண்மையான இயல்பு. இதை மாற்றவோ, அழிக்கவோ முடியாது." இவ்வாறு பேசினார்.

அமிர்தானந்தமயி அவர்களின் சில பொன்மொழிகள்:

  • அன்பு இருக்கும் இடத்தில் தூரம் முக்கியமில்லை.

  • நமக்கு வரும் சோதனைகளும் வேதனைகளும் நம்மை ஆன்மீக வாழ்வில் முன்னேற்ற வந்தவையே.

  • பிறரைத் துன்புறுத்துவது அறியாமையின் விளைவே.

  • எங்கு சென்றாலும் அமிர்தத்தை மட்டும் சேகரிக்கும் தேனீ போல இரு.

  • கடமையை முன்னிட்டுச் செய்த செயலுக்கு வெகுமதியை எதிர்பார்க்கக்கூடாது!

  • அன்னதானத்தைவிட வித்யாதானம் என்னும் கல்விச் செலவுக்கு உதவுதல் மிகச் சிறந்தது.

  • அறிவுக்கு முற்றுப் புள்ளி என்பது கிடையாது.

இந்த உலகம் நம்மை தாங்கி நிழல் தருகிறது. வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்தி கடக்க சிறிய கைகள், கால்கள் போதாது. தியாகம், பிறர் துயரம் துடைத்தல் போன்றவற்றால் மட்டுமே சாத்தியமாகும்.

இதையும் படியுங்கள்:
கவிதை: நிழல் விடுத்து நிஜத்திற்கு...
Amritanandamayi
Read Entire Article