"விடுதலை" படத்திலிருந்து நீக்கப்பட்ட 12 நிமிட காட்சி வெளியானது

2 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன், விசாரணை, ஆடுகளம், அசுரன், வடசென்னை போன்ற பல வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் நிலையான இடம் பிடித்தார். இவரது இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து பவானி ஸ்ரீ,கவுதம் வாசுதேவ் மேனன், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்றது.

விடுதலை' படம் 53வது சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்த 'விடுதலை', 'விடுதலை 2' படங்கள் திரையரங்குகளில் வெளியாகி கவனம் பெற்றன. கிட்டத்தட்ட 260 நாள்கள் படப்பிடிப்பு செய்யப்பட்ட படமென்பதால் பல காட்சிகள் படங்களில் இடம்பெறவில்லை. இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், 'விடுதலை' முதல் பாகத்தில் நடிகர் பிரகாஷ் நடித்து படத்தில் இடம்பெறாத 12 காட்சிகளைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்னும் சில காட்சிகள் வெளியாகும் என்றும் தெரிகிறது.

Viduthalai Deleted Scene #2 - A Hidden Moment with Prakash Raj & Vijay Sethupathi https://t.co/rocs3RN6kS pic.twitter.com/POLYAVgoZm

— RS Infotainment (@rsinfotainment) March 18, 2025
Read Entire Article