விடிய காலையே சோகம்… அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு!

1 day ago
ARTICLE AD BOX
Karur Bus Car Accident

குளித்தலை : கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், சம்பவ இடத்திலேயே காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் ஓட்டுநர் ஆகிய 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

விபத்தின்போது, அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதியதில் அப்பளம்போல் நொறுங்கிய கார். ஒரத்தநாடு கீழையூரில் உள்ள அக்னி வீரனார் கோயிலுக்கு சென்ற போது, இந்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது. காரில் வந்தவர்கள் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 2 பெண்கள், 3 ஆண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 5 பேரின் உடல்களை தீயணைப்பு துறையினர் 1 மணி நேரமாக போராடி மீட்டனர்.

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்கள் கோவை குனியமுத்தூரை சேர்ந்த செல்வராஜ், அவரது மனைவி கலையரசி, மகள் அகல்யா, மகன் அருண் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read Entire Article