ARTICLE AD BOX
விடாமுயற்சி திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. அஜித் குமார் - மகிழ் திருமேனி கூட்டணியில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகியுள்ளது.
1997ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான BREAK DOWN படத்தின் தழுவலாக, இந்த படம் உருவாகியுள்ளது. இதில் அர்ஜூன், திரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அண்மையில் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்திற்கு தணிக்கைக் குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.