ARTICLE AD BOX
பிக் பாஸ் நடிகை சமீபத்தில் பொதுவாக கூறிய கருத்தை, விஜய்யை பற்றி கூறியதாக மாற்றி குறிப்பிட்ட ஒரு நெட்டிசனை வறுத்தெடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான "பேட் கேர்ள்" என்ற படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த படம் குறித்து பிக்பாஸ் போட்டியாளர், நடிகையுமான சனம் ஷெட்டி தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
அவர் கூறியதாவது: "Bad Girl" திரைப்படம் ஒரு கெட்ட உதாரணம். சம உரிமை என்பது பத்து பேருடன் படுப்பேன், தம் அடிப்பேன் , கஞ்சா அடிப்பேன் என்பதல்ல. ஆண்களுக்கு இணையாக சம வாய்ப்புகள் பெண்களுக்கு கிடைப்பதே உண்மையான சம உரிமை.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூகத்தில் சமமாக வாய்ப்புகள் இருக்கிறதா? இல்லை. திரை உலகை பொருத்தவரை, ஹீரோவுக்கு உள்ள சம்பளமும், ஹீரோயினுக்கு உள்ள சம்பளமும் ஒன்றல்ல.
ஒரு ஹீரோவை அணுகும் விதமும், ஒரு ஹீரோயினை அணுகும் விதமும் ஒன்றாக இல்லை. என் வாழ்க்கையில் நான் அனுபவித்ததைச் சொல்கிறேன். எங்களை படங்களில் நடிக்க அழைக்கிறார்கள் என்று பார்த்தால், படுக்கவும் அழைக்கிறார்கள். நிலைமை இப்படித்தான் இருக்கிறது.
இதில்தான் சம உரிமை வேண்டும். இதைப் பற்றியே பேசுங்கள். ஸ்கூல் பொண்ணுங்களை வைத்து "பத்து பேருடன்" படு, கஞ்சா அடி, தம் அடி என்று சொல்வதை சம உரிமை என்று கூற முடியுமா? இத்தகைய மோசமான படத்தை பெரிய மனிதர்கள் பாராட்டுவது எனக்குத் தாங்க முடியவில்லை," என்று கூறியிருந்தார்.
சனம் ஷெட்டி கூறிய இந்த கருத்தை, விஜய்க்கு எதிரானதாக மாற்றி, நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். இதற்குப் பதிலடியாக சனம் ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
"என்னுடைய பேச்சை ஏன் தேவையில்லாமல் சீப்பான விளம்பரத்திற்காக மாற்றுகிறீர்கள்? நான் பொதுவாகவே கருத்தை கூறினேன். 'பேட் கேர்ள்' டீசர் மூலம் எனது கருத்தை தெரிவித்தேன். நான் கூறியது, இருபாலருக்கும் சம உரிமை வேண்டும் என்பது தான். விஜய்யைப் பற்றியோ, வேறு எவரைப் பற்றியோ நான் எதுவும் சொல்லவில்லை. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்தவும்."
இதனை அடுத்து, அந்த நெட்டிசன் தனது பதிவை நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Why are you twisting my speech so cheaply @aravinth43AK ??
I spoke about a completely different topic: #BadGirl teaser and #Equality in general!
It's NOT about Vijay sir at all!!
STOP spreading wrong information! #beware #wronginfo https://t.co/vFMpFjC9Ky