ARTICLE AD BOX
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யுடன் ரகசியமாக அரசியல் வியூக ஆலோசனை செய்ததாக நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் சமூக வலைதளத்தில் செய்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், இந்த கட்சி அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிட உள்ளது. மேலும், இந்த கட்சியுடன் சில அரசியல் கட்சிகள் கூட்டணியாக இணையும் என்றும், பிற கட்சிகளில் உள்ள பிரபலங்கள் இதில் சேரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, தேர்தல் நெருங்க நெருங்க திரையுலகைச் சேர்ந்தவர்களும் பலர் இந்த கட்சிக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜய்யுடன் ரகசிய ஆலோசனை செய்வது போன்ற கனவு வந்ததாக நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது...
நேற்றிரவு நேற்றைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான திரு விஜய் அவர்களுடனான ஊடலான உரையாடல் , பஜ்ஜியுடன் தேனீர் ருசித்தல், வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் இப்படி விடிய விடிய நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள். சரி அதை பதிவு செய்ய ஒரு selfie எடுத்துக்கொள்ளலாமே எனப் பார்த்தால் …..
அது கனவு!
ஏந்தான் இப்படியொரு பகல் கனவு இரவில் வருதோ?
ஆனா சத்தியமா வந்தது.
கனவுகள் நம் நினைவுகளின் நகல்கள் எனச் சொல்வார்கள். சமீபமாக என்னிடம் அவர் பற்றிய கேள்விகள் அது சம்மந்தமான மந்தமான என் பதில்கள் …இப்படி சில பல! காரணமாக இருக்கலாம்.
நேற்றிரவு நேற்றைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான திரு விஜய் அவர்களுடனான ஊடலான உரையாடல் , பஜ்ஜியுடன் தேனீர் ருசித்தல், வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் இப்படி விடிய விடிய நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள். சரி அதை பதிவு செய்ய ஒரு selfie எடுத்துக்கொள்ளலாமே எனப் பார்த்தால்… pic.twitter.com/MzV00BS3b7
— Radhakrishnan Parthiban (@rparthiepan) February 19, 2025