ARTICLE AD BOX
விஜய்க்கு அவர்களோடுதான் நேரம் செலவழிக்கணுமாம்.. அவங்க இல்லைனா அவ்ளோதானாம்.. யார் தெரியுமா?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும்தான் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்துக்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஹெச்.வினோத் இயக்க பாபி தியோல் வில்லனாகவும், பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. கடைசி படம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்று அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் மகனான விஜய் தனது தந்தையின் துணையால்தான் சினிமாவுக்குள் அறிமுகமானார். அப்படி அறிமுகமானபோது ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தார். முக்கியமாக கடுமையான உருவ கேலியை சந்தித்தார். ஆனால் அதையெல்லாம் அவர் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அதேசமயம் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு எஸ்.ஏ.சியின் மகன் என்கிற அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார். முக்கியமாக தந்தையின் துணையால் சினிமாவுக்குள் வந்தாலும் கோலிவுட்டில் நிலையாக நின்றதற்கு காரணம் விஜய்யின் திறமை மட்டும்தான் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.
முன்னணி ஹீரோ: முதலில் குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் விதமாக படங்களில் நடித்த விஜய்; ஒருகட்டத்தில் தனது கியரை மாற்றினார். அதன்படி ரமணா இயக்கத்தில் அவர் நடித்த திருமலை திரைப்படம் மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட்டடித்தது. அதிலும் விஜய்யை பக்கா ஆக்ஷன் ப்ளஸ் கமர்ஷியல் ஹீரோ என்கிற இடத்துக்கு கொண்டு சென்று நிறுத்தியது. அந்தப் படத்திலிருந்து விஜய் இனி தனக்கு கமர்ஷியல் பாதைதான் சரி என்பதை தேர்ந்தெடுத்து அந்தப் பாதையில் தொடர்ந்துப் பயணிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த கில்லி, திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி என ஏகப்பட்ட படங்கள் ஏ,பி, சி என அனைத்து செண்ட்டர்களிலும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி விஜய்யை முன்னணி ஹீரோவாக மாற்றியது.

டாப் ஹீரோ: தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துவந்த விஜய்க்கு இடையில் சின்ன சறுக்கல் ஏற்பட்டாலும் சுதாரித்துக்கொண்ட அவர் தொடர்ந்து காவலன், வேலாயுதம், துப்பாக்கி, நண்பன் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து டாப் ஹீரோ என்ற இடத்துக்கு நகர்ந்தார். முக்கியமாக ரஜினிகாந்த்துக்கு இடையில் சின்ன தோல்விகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து ரஜினியின் சூப்பர் ஸ்டார் நாற்காலியில் விஜய்யை அமர வைத்தார்கள் அவரது ரசிகர்கள். அதற்கேற்றபடி விஜய்யின் படங்களும் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும், வசூல் ரீதியாக வரிசையாக நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் பணியில் விஜய்: இதற்கிடையே விஜய்யை எப்படியாவது அரசியலுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் எஸ்.ஏ.சி தெளிவாக இருந்தார். இதன் காரணமாக விஜய் ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்ற வைத்தார். அந்த இயக்கம் மூலம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் விஜய் செய்தார். அதுமட்டுமின்றி ஈழ பிரச்னை உள்ளிட்ட சென்சிட்டிவ்வான பிரச்னைகளுக்கு போராடியது, ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு கொடுத்தது என விஜய்யும் திரையுலகம் மட்டுமின்றி பொது பிரச்னைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இதன் காரணமாக விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகம்: அதன்படி தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். சினிமாவில் டாப்பில் இருக்கும்போது ஒரு நடிகர் அதனை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருப்பது பலரிடம் ஆச்சரியத்தையும், பாராட்டையும் பெற்றிருக்கிறது. இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனியெல்லாம் விஜய்யின் இந்த முடிவுக்கு ஓபனாகவே தனது வரவேற்பை கொடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி நடிகர் தாடி பாலாஜி உள்ளிட்டோர் எல்லாம் தவெகவில் உறுப்பினராக மாறிவிட்டார்கள். கண்டிப்பாக விஜய்யை தமிழ்நாடு அரசியல் களத்தில் வெல்ல வைத்து கோட்டைக்கு அனுப்ப வேண்டும் என்று அவரது தொண்டர்களும் முழுமூச்சாக வேலை செய்ய தொடங்கியிருக்கிறார்கள்.
பாஜகவின் பி டீம்: இதற்கிடையே விஜய் தொடர்ந்து திமுகவை தாக்கிவருவதால் அவரை பாஜகவின் பி டீம் என்றே திமுகவினர் அழைக்கிறார்கள். மேலும் அவரால் அரசியலில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது கட்சி டெபாசிட்டைக்கூட பெறாது என்றும் ஆணித்தரமாக கூறிவருகிறார்கள். ஆனால் விஜய் தரப்போ இப்படி கூறுபவர்களின் வாயை தேர்தலில் அடைப்போம் என்று உறுதியோடு கூற ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும் எப்போதும் அமைதியாகவே அறியப்பட்ட விஜய்யை அரசியல் மேடையில் இவ்வளவு வீரியமாக பேசுவதை பார்த்து அவர்கள் ஆச்சரியமும் பட்டிருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி இருக்கிறார்?... முதல் ஆளாக வந்த பிரபலம்.. முதல்வர் கொடுத்த நம்பிக்கை!
கடைசி படம்: முழு மூச்சாக அரசியலில் களமிறங்கியிருப்பதால் விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருக்கிறார். ஹெச்.வினோத் இயக்கிவரும் அந்தப் படத்துக்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் இரண்டு போஸ்டர்கள் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26ஆம் தேதி வெளியாகின. அதனை பார்க்கையில் கண்டிப்பாக இந்தப் படம் அரசியல் ரீதியான படமாக இருக்கும் என்று ரசிகர்கள் உறுதிபட கூற ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விதமாகத்தான் இந்தப் படம் இருக்கும் என்று இயக்குநர் வினோத் ஒரு விழா மேடையில் கூறிவிட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

விஜய்யின் நண்பர்கள்: இதுதான் அவரது கடைசி படம் என்பதால் அவரது ரசிகர்கள் சோகமடைந்திருக்கிறார்கள். முன்னதாக விஜய்யை பொறுத்தவரை அவருக்கான நண்பர்கள் வட்டம் ரொம்பவே சிறியது. சின்னத்திரை நடிகர் சஞ்சீவ், நடிகர் ஸ்ரீநாத் உள்ளிட்ட ஐந்து பேர் மட்டும்தான் விஜய்யின் பெர்சனல் வாழ்க்கையில் நெருக்கமான நண்பர்கள். எப்போதும் அவர்களுடன் இருப்பார். பொது வெளியில் அமைதியாக இருக்கும் விஜய் அவர்களுடன் இருக்கும்போது மட்டும் கலகலவென்று இருப்பார் என்று அவர்களே கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் தனது நண்பர்கள் குறித்து விஜய் பேசியிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
விஜய்யின் பேட்டி: அவர் சில வருடங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஒரு மாதமோ ஒன்றரை மாதமோ ஏதாவது ஒரு படத்தின் ஷூட்டிங் முடிந்து வந்தால் அடுத்த நாள் அவர்களோடு டைம் ஸ்பெண்ட் செய்யவில்லை என்றால் ஒரு கை உடைந்த மாதிரி ஆகிவிடும். கண்டிப்பாக அவர்கள் இல்லை என்றால் முடியாது. ரொம்ப கஷ்டம்" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் யப்பா தளபதி விஜய்க்கு அவருடைய நண்பர்கள் மீது இவ்வளவு பாசமா என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். அதேபோல் ஒரு நிகழ்ச்சியில் விஜய்யின் நண்பர்கள் கலந்துகொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் விஜய்யை அவர் இவர் என்று அழைத்து பேசிக்கொண்டிருந்தார். உடனே விஜய், 'டேய் சும்மா அவன் இவன் என்றே சொல் டா..எனக்கே ஒரு மாதிரி இருக்கு' என்று ஜாலியாக சொல்லியாக வீடியோ ஒன்றும் திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது.