விஜய் மீண்டும் சினிமாவிற்கு வந்தா.. மனம் திறந்து பேசிய டிராகன் பட இயக்குநர்

22 hours ago
ARTICLE AD BOX

விஜய் 

நடிகர் விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துவிட்டார். அரசியல் சென்றுள்ள காரணத்தினால் சினிமாவிலிருந்து முழுமையாக விலக முடிவு செய்துள்ளார்.

இது அவருடைய சினிமா ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. ஒரு பக்கம் அவருடைய கடைசி படம் ஜனநாயகன் என கூறப்பட்டாலும், மறுபக்கம் அவர் மற்றொரு படமும் நடிப்பார், அது தளபதி 70 என கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து தளபதி விஜய்யிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.

மனம் திறந்து பேசிய இயக்குநர்

இந்த நிலையில், விஜய் மீண்டும் சினிமாவிற்கு வந்தால், நான் கண்டிப்பாக போய் நிற்பேன் என இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளார். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த டிராகன் படம் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்திய பேட்டியில், தான் ஒரு தளபதி விஜய்யின் ரசிகன் என கூறியிருந்தார். மேலும் மற்றொரு பேட்டியில் பேசிய அஸ்வத் மாரிமுத்து, விஜய் மீண்டும் சினிமாவிற்கு வந்தால், கண்டிப்பாக படம் பண்ணணும்னு நான் போய் நிற்பேன் என கூறியுள்ளார். 

Read Entire Article