ARTICLE AD BOX
விஜய் மனைவி சங்கீதா அப்படித்தான்.. கண்ணால பார்த்துட்டு இருக்கேன்.. ஓபனாக பேசிய மாமியார்
சென்னை: விஜய் இப்போது ஜன நாயகன் படத்தில் நடித்துவருகிறார். ஹெச். வினோத் இயக்கிவரும் அப்படம்தான் விஜய் நடிக்கும் கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு அடுத்ததாக முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தவிருக்கிறார். இதற்கிடையே விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் பிரச்னை என்றும்; இரண்டு பேரும் பிரிந்திருப்பதாகவும் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் விஜய்யின் தாய் ஷோபா கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதற்கும் முன்னதாக அவர் நடித்த லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய மூன்று படங்களுமே மிகப்பெரிய வரவேற்பையெல்லாம் பெறவில்லை. வரிசையாக நான்கு படங்கள் பெரிய ரெஸ்பான்ஸை எதுவும் பெறவில்லை என்பதால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டாகியிருக்கின்றனர். அதேசமயம் இந்த நான்கு படங்களுமே வசூல் ரீதியாக அட்டகாசமான வரவேற்பை பெற்றிருப்பதாக தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன.

ஜன நாயகன்: தற்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்துவருகிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகவும்; விரைவில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. படத்திலிருந்து கடந்த ஜனவரி மாதம் இரண்டு போஸ்டர்கள் வெளியாகின. அதனைப் பார்த்த ரசிகர்கள் இது அரசியல் ரீதியான படமாக இருக்குமோ; அப்படி இருந்தால் விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு ரொம்பவே உதவியாக இருக்கும் என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார். கட்சி தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்திருக்கும் சூழலில் இதுவரை ஐந்துக்கும் குறைவான மீட்டிங்குகளை நடத்தியிருக்கிறார். மேலும் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவே இல்லை. இதை அவர் உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவரது கட்சியினரே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க விஜய்யை கடுமையாக திமுகவினரும், விசிகவினரும் விமர்சனம் செய்யவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.
முன்னாள் மனைவிக்கு அறுவை சிகிச்சை?.. ஓடோடி சென்று உதவிய ஏ.ஆர்.ரஹ்மான்?.. காதல் இன்னும் குறையல
சங்கீதாவுடன் பிரச்னை?: முக்கியமாக விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் பிரச்னை என்று சில மாதங்களாகவே தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதனை மையமாக வைத்து விஜய்யை சாட ஆரம்பித்திருக்கிறார்கள் அவருக்கு எதிர் தரப்பில் இருப்பவர்கள். ஆனால் இதில் துளிக்கூட உண்மையில்லை; இரண்டு பேரும் சேர்ந்துதான் வாழ்கிறார்கள்; விஜய்யின் இமேஜை டேமேஜ் ஆக்கத்தான் இப்படி பலரும் அவரது குடும்ப விஷயத்தை தோண்டுகிறார்கள் என்று தவெகவினர் வாள் சுழற்றுகிறார்கள்.
ஷோபா பேட்டி: இந்நிலையில் விஜய்யின் தாய் ஷோபா தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது. அதில் சங்கீதா குறித்து பேசுகையில், "சங்கீதா ரொம்ப நல்ல பெண். முழுக்க முழுக்க ஹவுஸ் வைஃபாக இருக்கிறார். அவர் போல் பிள்ளைகளை வளர்க்கவே முடியாது. அவர்கள் மீது அவ்வளவு பாசத்தை கொட்டுகிறார். அதனை நான் கண்களால் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அதேபோல் பிள்ளைகளுக்கு எதாவது வேண்டுமென்றால் வேலைக்காரர்களை விட்டு கொடுக்க சொல்லமாட்டார். எதுவாக இருந்தாலும் தன் கைகளால் மட்டும்தான் கொடுப்பார்" என்றார்.
சூர்யா பற்றி ஜோதிகா இப்படி சொல்றாரே?..திருமணத்துக்கு பிறகுதான் பாகுபாடாம்.. பஞ்சாயத்து கன்ஃபார்ம்?