விஜய் தான் என்னுடைய க்ரஷ்…. ‘டிராகன்’ பட நடிகை பேச்சு!

3 hours ago
ARTICLE AD BOX

டிராகன் பட நடிகை கயடு லோஹர் விஜய் தான் என்னுடைய க்ரஷ் என கூறியுள்ளார்.விஜய் தான் என்னுடைய க்ரஷ்.... 'டிராகன்' பட நடிகை பேச்சு!

கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பிலும் அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்திலும் வெளியான திரைப்படம் தான் டிராகன். இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர் , மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக வந்த கயடு லோஹர் ட்ரெண்டிங் நடிகையாக மாறிவிட்டார். ஆரம்பத்தில் இவர் கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார். அதன்படி டிராகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் சமூக வலைதளங்களில் அதிகம் தேடும் நடிகையாக மாறிவிட்டார். விஜய் தான் என்னுடைய க்ரஷ்.... 'டிராகன்' பட நடிகை பேச்சு!இந்நிலையில் இவர் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அவரிடம் உங்களுடைய Celebrity Crush யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கயடு லோஹர், விஜய் தான் தன்னுடைய க்ரஷ் எனவும் அவருடைய தெறி படம் தனக்கு மிகவும் பிடித்த படம் எனவும் பதில் அளித்துள்ளார்.

Read Entire Article