ARTICLE AD BOX

நடிகர் பார்த்திபன் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் தனது திரையுலக அனுபவங்கள் குறித்து பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க.
புதிய பாதையே எனக்கு மாறுபட்ட படமாக இருந்து ஜெயித்தது. அதனால்தான் வித்தியாசமான படங்களையே எடுக்க ஆரம்பிச்சேன். முதல் 3 சீனுலயே மிரட்ட நினைச்சேன். அதுல ஒரு ஹீரோவுக்கான அறிமுகமே இருக்காது. அந்த வகையில கிளைமாக்ஸ்சும் ஒத்துக்குவாங்களான்னு தெரியலன்னு குழப்பம் இருந்தது. இருந்தாலும் என்னோட கேரக்டர் பெரிசா ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சுகமான சுமைகள்: பொண்டாட்டி தேவை படத்துல மனைவியா இருக்க உடல் தகுதி இல்லை. அதனால நீ மனைவியா இருக்கலன்னாலும் கூட ஏன் தாயாக இருக்கக்கூடாதுன்னு கிளைமாக்ஸ் எடுத்திருப்பேன். அது தைரியமா வச்சேன். அதனாலேயே அந்தப் படம் பெரிசாப் போகல. சுகமான சுமைகள் படத்துலயும் அதுதான். எங்க அம்மாவோட என்னவெல்லாம் படம் பார்த்தேனோ அந்த மாதிரி ஒரு படம். கஷ்டப்படுற ஒரு அண்ணன், 5 தங்கச்சி. குடும்பத்தோடு பார்க்கற படம்னா என் குடும்பம் மட்டும்தான் பார்த்தது. வேற எந்தக் குடும்பமும் பார்க்கல.
சூப்பர்ஹிட் கமர்ஷியல்: அந்தப் படத்துக்கு 75 லட்சம் ரூபாய் நஷ்டம். மறுபடியும் கோபம் வந்து பண்ணதுதான் உள்ளே வெளியே. அது படு கமர்ஷியல் படம். எதிர்பார்க்குற காட்சிகள் எல்லாம் அதுல இருக்காது என்று தனது சூப்பர்ஹிட் கமர்ஷியல் படத்தைப் பற்றி பார்த்திபன் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஹவுஸ்புல் படம் எனக்கு டர்னிங் பாயிண்ட். மறுபடியும் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மிகப்பெரிய படமா அமைஞ்சது. அதுல கதையே இருக்காது.

ஆடுகளம்: ஒத்த செருப்பு படம் இன்னும் மிகப்பெரிய வெற்றியா அமைஞ்சது. தமிழ், இந்தி, இப்போ ஹாலிவுட்டுக்கும் வேலை நடக்குது என்று உற்சாகம் பொங்க தெரிவிக்கிறார். அதே நேரம் இவர் தனுஷ், விஜய் ஆகிய நடிகர்களை வைத்து இயக்குவதாக இருந்த படங்கள் மிஸ் ஆனதையும் தெரிவித்துள்ளார். ஒரு தடவை செல்வராகவன் சொன்னாரு. நாம தனுஷை வச்சி ஒரு படம் பண்ணலாம்னு. ஆடுகளம் நான் பண்ண வேண்டியது.
விஜய், தனுஷ்: வெற்றிமாறன் என்னைக் கன்வின்ஸ் பண்றாரு. நான் ஒரு வயதானவரா பண்றதுக்கு. அப்போ அவ்ளோ வயதானவரா இல்ல. அப்போ என்னுடைய பிளான் இன்னொரு கதை ரெடி பண்ணியிருந்தேன். அதுல நானும், தனுஷ்சும் நடிக்கிறதுக்கு. தம்பி வந்து கொஞ்சம் தயங்குறாருன்னு செல்வராகவன் சொன்னார். அதே போல விஜய் நடித்த 3 இடியட்ஸ் படம் கூட இவர்தான் பண்றதாக இருந்ததாம். அது எப்படியோ மிஸ் ஆச்சு என்கிறார் பார்த்திபன்.