ARTICLE AD BOX
விஜய் சாதனையை முறியடித்த மோகன்லால்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!! நடந்தது என்ன..?
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய், பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பிடித்து வைத்திருக்கிறார். மேலும், விஜய்யின் அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபீஸில் பல ரெக்கார்டுகளை செய்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம். இந்நிலையில், விஜய்யின் சாதனையை மோகன்லால் முறியடித்துள்ளதாக முக்கிய செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மழை கொட்ட போகுது.. இன்றைய வானிலை அறிக்கை!!
அதாவது, கேரளாவில் இதுவரை முதல் நாள் கலெக்சனில் அதிகம் வசூலித்த படம் எதுவென்றால் அது விஜய்யின் ‘லியோ’ படம் தான். அதன் பிறகு ‘புஷ்பா 2’ படமும் முதல் நாள் கலெக்சனில் அதிகம் வசூலித்திருந்தது. தற்போது மோகன்லால் நடிப்பில் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ள ‘L2; எம்புறான்’ திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் மட்டும் பெரிய சாதனை படைத்துள்ளதாகவும், அதன்மூலம் கேரளாவில் முதல் நாள் கலெக்சனில் விஜய்யின் லியோ பட சாதனையை முறியடிக்கும் என்றும் உறுதியான தகவல் கிடைத்துள்ளது. தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
The post விஜய் சாதனையை முறியடித்த மோகன்லால்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!! நடந்தது என்ன..? appeared first on EnewZ - Tamil.