ARTICLE AD BOX
விஜய் இதை மாற்றிக்கொள்ள வேண்டும்.. ரொம்ப கஷ்டம்.. ஓபனாக பேசிவிட்ட திரிஷா
சென்னை: விஜய்யும் திரிஷாவும் இணைந்து கடைசியாக லியோ படத்தில் நடித்தார்கள். அதற்கு பிறகு GOAT படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார்கள். ஜோடியாக நடித்தாலும், ஆடினாலும் இருவருக்குமான கெமிஸ்ட்ரி பக்காவாக இருக்கிறது என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள். இதற்கிடையே இரண்டு பேரையும் இணைத்து கிசுகிசுவும் கிளம்பின. ஆனால் அதிலெல்லாம் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பது இரண்டு பேரின் ரசிகர்களின் நிலைப்பாடு ஆகும்.
கோலிவுட்டின் ரீல் ஜோடிகளில் எப்போதுமே விஜய்யும் திரிஷாவும் ரசிகர்களின் ஃபேவரைட். இரண்டு பேரும் சேர்ந்து முதன்முதலில் கில்லி படத்தில் நடித்தார்கள். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதிலிருந்து இருவருக்குமான கெமிஸ்ட்ரி அட்டகாசமாக இருக்கிறது. கில்லிக்கு பிறகு திருப்பாச்சி, ஆதி, குருவி படங்களில் நடித்தார்கள். அதிலும் விஜய் - திரிஷாவின் ஜோடி கொண்டாடப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை இரண்டு பேரும் சேர்ந்து பத்து வருடங்களுக்கும் மேலாக நடிக்கவே இல்லை.
என்ன காரணம்?: அதற்கு காரணமாக பல யூகங்கள் சொல்லப்படுகின்றன. அதாவது விஜய்யும், திரிஷாவும் நெருங்கி பழகுகிறார்கள்; அதனால் இருவரின் வீட்டிலும் பிரச்னை. எனவேதான் அவர்கள் இணைந்து நடிக்கவில்லை என்று கூறினார்கள். அதுமட்டுமின்றி திரிஷாவுக்கு விஜய் விலையுயர்ந்த பரிசு பொருட்கள் எல்லாம் வாங்கி கொடுத்திருக்கிறார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதில் எள்ளளவுகூட உண்மையில்லை என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.
லியோவில் கூட்டணி: சூழல் இப்படி இருக்க கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் இரண்டு பேரும் சேர்ந்து நடித்தார்கள். இந்தப் படத்திலும் அவர்களது கெமிஸ்ட்ரி பக்காவாக இருந்தது. முக்கியமாக படத்தில் லிப் லாக்கும் இருந்தது. அந்தப் படத்துக்கு பிறகு GOAT படத்தில் இரண்டு பேரும் இணைந்து ஆடினார்கள். பெரும்பாலும் திரிஷா ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதென்பது அரிதிலும் அரிது. ஆனால் விஜய்க்காக அந்தப் பாடலில் நடனம் ஆட ஒத்துக்கொண்டார்.
ரஜினியின் கபாலி பட தயாரிப்பாளர் தற்கொலை.. வாடகை வீட்டில் என்ன நடந்தது?.. போலீஸ் விசாரணை
மீண்டும் கிசுகிசு: நிலவரம் இப்படி இருக்க ஒருமுறை விஜய்யின் பிறந்தநாளுக்கு திரிஷா ஒரு ஃபோட்டோ போட்டிருந்தார். லிஃப்ட்டில் தன்னுடன் விஜய் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த திரிஷா, 'Love For Ever' என்று குறிப்பிட்டிருந்தார். அது மேற்கொண்டு கிசுகிசுவை கிளப்பியது. அதேபோல் கீர்த்தி சுரேஷின் திருமணத்துக்கு விஜய்யும், திரிஷாவும் தனி விமானத்தில் சென்றார்கள். ஏற்கனவே அவர்களை இணைத்து பேசியவர்களுக்கு அந்த ஃபோட்டோவும், தனி விமான பயணமும் அவலாக கிடைத்தது.
வேண்டுமென்றே: ஒருகட்டத்தில் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் பிரச்னை வர காரணமே திரிஷாதான் என்றெல்லாம் கொளுத்திப்போட்டார்கள். இதுகுறித்து இரண்டு பேருமே அமைதியாக இருக்கிறார்கள். மேலும் சினிமாவிலிருந்து திரிஷா விலகுவதாகவும்; விஜய்யின் கட்சியில் சேர்வதாகவும் இன்னொரு தரப்பினர்கள் கூறினார்கள். அதனை திரிஷாவின் தாயாரான உமா கிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்தார். இந்நிலையில் திரிஷா கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
என் பையனுக்கு அப்படி நடந்தால் தப்பு.. என்ன மகன் பற்றி தனுஷ் இவ்வளவு ஓபனா சொல்லிட்டாரு?
திரிஷாவின் பேட்டி: விஜய்யும், திரிஷாவும் காஃபி வித் அனு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய திரிஷா, "என்னை ஷூட்டிங் ஸ்பாட்டில் டீஸ் செய்வது சிம்புதான். ஆனால் விஜய் ரொம்ப அமைதியாக இருப்பார். ஒரு பெரிய சுவரை பார்த்து சும்மாவே உட்கார்ந்திருப்பார். எந்த பிரச்னையாக இருந்தாலும் சைலெண்ட்டாகத்தான் இருக்கும். அந்த சைலெண்ட் சமயத்தில் மற்றவர்களுக்கு புரியாது. ரொம்ப கஷ்டம். அதனால் விஜய் அதனை மாற்றிக்க்கொள்ள வேண்டும்" என்றார்.