ARTICLE AD BOX
செய்தியாளர்கள் சந்திப்பின்போது தமிழிசை சௌந்தர்ராஜன் நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகுதா? என்று கிண்டல் செய்துள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கி இன்றோடு ஒரு வருடம் முடிவடைந்தது. இதனை ஒட்டி இன்று கட்சி தலைமையில் கொடி ஏற்றி கொள்கை தலைவர்களின் சிலையை திறந்து வைத்தார் விஜய். 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம் என்று விஜய் கூறியுள்ளார். இதனையடுத்து தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்டு ஒரு வருடம் முடிவு பெற்றது. இதனையடுத்து அரசியல் கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில் பிற அரசியல் கட்சி தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் செய்தியாளர்களை சந்தித்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழக பாஜக மூத்த தலைவர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தொடங்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்தது குறித்து பேசினார். அதாவது, நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகுதா? அவர் invisible இருந்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்றால் எவ்வளவு காலம் ஆகிறது? என்று அவர் திரையில் தான் Visual ஆக இருக்கிறார். அவருடைய ரசிகர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது.
அவர் களத்துக்கு இறங்கி வந்து மக்களுக்காக பணியாற்றினால் நன்றி. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி உள்ளது. அதுபோல விஜய்க்கு தொலைநோக்கில் தான் அரசியல் செய்ய வேண்டும். களத்தில் இறங்க வேண்டும் என்று நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது. மக்களோடு மக்களாக எங்களைப் போன்று பழகுகின்ற தலைவர்களை சரியான தலைவர்கள் என நாங்கள் நினைக்கிறோம் அதை விஜய் முடிவு செய்யட்டும்” என்றார்.