ARTICLE AD BOX
சென்னை வந்த தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை நேற்று சந்தித்து 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழாவில் பங்கேற்க தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா வரவேற்று காரில் அழைத்துச் சென்றார். தொடர்ந்து, தவெக தலைவர் விஜயை சந்தித்து பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தினார். இரவு 8.30 மணி அளவில் தொடங்கிய ஆலோசனை, 10.30 மணி வரை நடைபெற்றது.
இதில், இன்று நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.