விஜயின் தவெக, அதிமுக கூட்டணி சாத்தியமா? அது என்ன டிசம்பர் கணக்கு தெரியுமா?

6 hours ago
ARTICLE AD BOX

விஜயின் தவெக, அதிமுக கூட்டணி சாத்தியமா? அது என்ன டிசம்பர் கணக்கு தெரியுமா?

Chennai
oi-Oneindia Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) அரசியல் களத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருகிறது. விஜய் தனித்துப் போட்டியிடுவாரா அல்லது அதிமுகவோடு கூட்டணி அமைப்பாரா என்பதுதான் தமிழக அரசியலில் சூடான பேச்சாக உள்ளது. அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளுக்கிடையேயான போட்டியில், விஜய் கட்சியின் நிலைப்பாடு முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் அத்தனை கட்சியினரிடமும் விஜய் எடுக்கும் முடிவு குறித்த எதிர்பார்ப்பு உள்ளது.

அதிமுகவின் கணிப்பு

tvk aiadmk vijay

அதிமுக கட்சியின் உள் வட்டாரங்கள் கூறுகையில், விஜய் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால், திமுக ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு ஓட்டுகள் ஒரே கூட்டணிக்கு வந்துவிடும். இதன் மூலம், அதிமுக எளிதாக வெற்றி பெறும் என அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். திமுகவின் மீதான மக்களின் எதிர்ப்பு உணர்வுகளை ஒன்றிணைத்து, அதிமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கு விஜய் கட்சியின் பங்களிப்பு முக்கியமானது என்பது அதிமுக தலைமையின் கருத்து.

விஜய் கட்சியின் திட்டம்

விஜய் கட்சியின் வட்டாரங்கள் கூறுகையில், திமுக கூட்டணியில் உள்ள சிறு கட்சிகள் பிரிந்து வந்தால், அவர்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என விஜய் நினைக்கிறார். இந்த வியூகத்தை, விஜய் கட்சியின் விக்கிரவாண்டி நகரில் நடந்த மாநாட்டில் அவரது உரையில் எடுத்துக்காட்டி விட்டார். திமுக கூட்டணியில் உள்ள சிறு கட்சிகள் தங்களுக்கு போதுமான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்று கருதி பிரிந்து செல்லும் சூழல் ஏற்பட்டால், த.வெ.க கட்சி அவர்களுடன் கூட்டணி அமைத்து, தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் என்பது அவரது திட்டம்.

எதிர்ப்பு ஓட்டுகள் பிரியும் சூழல்

அதேநேரம், அதிமுக கூட்டணி தனியாகவும், விஜய் கட்சி தனியாகவும் போட்டியிட்டால், எதிர்ப்பு ஓட்டுகள் பிரிந்து விடும். இதனால், திமுக பழையபடி ஆட்சியை அமைக்க வாய்ப்பு ஏற்படும் என்பது நாம் பேசிய பல அரசியல் விமர்சகர்களின் ஒருமித்த கருத்து. திமுகவை கடுமையாக எதிர்க்கும் விஜய், திமுக ஆட்சி ஏற்பட காரணமாக மாற விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. ஒருவேளை திமுக திரும்ப ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுகள் அரசியல் ரீதியாக விஜய் கடும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடுமும் என்ற அச்சமும் அவருக்கு உள்ளதாம்.

டிசம்பர் வரை காத்திருப்பு

இந்த நிலையில், விஜய் டிசம்பர் மாதத்திற்குள்ளாக, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு, மக்களின் மனோநிலையை புரிந்துகொள்ள திட்டமிட்டுள்ளார். இதன் மூலம், தமிழக வெற்றிக் கழகம் தனித்து வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், தனியாக போட்டியிடும் எனவும், அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தால், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட முடிவுகளை எடுக்கும் என்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் தந்தி டிவிக்கு பேட்டியளித்த, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர், டிசம்பர் வரை கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில்தான் தொடரப்போகிறோம் எனக் கூறியது, விஜயை தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்ய வைத்து மக்களின் மனநிலையை அறிந்த பிறகு கூட்டணி வேண்டுமா வேண்டாமா என்பதை யோசிக்கலாம் என்பதால்தானாம்.

முக்கியமான முடிவு

பல அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், விஜய் கட்சியின் முடிவுகள் தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதில் சந்தேகமில்லை. திமுகவை எதிர்க்கும் விஜய், தனது கட்சியை ஒரு முக்கிய அரசியல் சக்தியாக உருவாக்குவதில் தீவிரமாக உள்ளார். அதேநேரம், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட முடிவுகளை அவர் எடுக்கும் போது, அது தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகிறது. அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளுக்கிடையேயான போட்டியில், விஜய் கட்சியின் முடிவுகள் தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள்.

More From
Prev
Next
English summary
Explore the latest political developments in Tamil Nadu as actor Vijay's Tamilaga Vettri Kazhagam (TVK) weighs its options between forming an alliance with AIADMK or contesting independently. With AIADMK hoping to consolidate anti-DMK votes and Vijay considering alliances with smaller parties, the 2024 elections could see a major shift in Tamil Nadu's political landscape. Learn how Vijay's decisions could impact DMK, AIADMK, and the future of Tamil Nadu politics. Stay updated on TVK's strategies, public sentiment, and potential alliances in this in-depth analysis.
Read Entire Article