ARTICLE AD BOX

விஜயாவால் முத்து வருத்தப்பட்டு கண்கலங்க மறுபக்கம் மனோஜ்க்கு ஆக்சிடென்ட் நடந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கறிக்கடைக்காரர் மணி ரோகினி இடம் பேசிக்கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அண்ணாமலை முத்துவுடன் ஷோரூமுக்கு வருகிறார். அப்போது இவர் ஹெல்மெட் போட்டுக்கொண்டு நடந்து போக முத்து அவரை கூப்பிட்டு போன் விட்டுட்டு போறீங்க என்று எடுத்துக் கொடுக்கிறார். வாங்கிக்கொண்டு அமைதியாக சென்றுவிட என்ன ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல மாட்டார என்று சொல்லுகிறார். உடனே ரோகினி என்ன அங்கிள் இந்த பக்கம் என்று கேட்க அப்பா எப்ப வேணாலும் வருவாரு அவர் தானே ஓனரு என்று முத்து சொல்லுகிறார்.
அதற்கு அண்ணாமலை என் பிரண்டு பொண்ணு கல்யாணத்துக்கு ஏதாவது கிச்சன் ஐட்டம் வாங்கலாம்னு தோணுச்சு. பையனோட தாய் மாமாவே எல்லா பொருளும் வாங்குறேன்னு சொல்லிட்டாராம் இருந்தாலும் நம்ம ஏதாவது சின்னதாக பொருள் வாங்கலாம்னு கடைக்கு வந்தம்மா என்று சொல்ல, வீட்ல சொல்லிருந்தா நானே டீடைல் சொல்லி இருப்பேன் என்று சொல்லுகிறார். பிறகு அண்ணாமலை முத்துவை அனுப்பிவிட, ரோகினி பொருளை காமிக்க அண்ணாமலையை கூட்டிச் செல்கிறார். மறுபக்கம் மனோஜ் வெளியில் வந்து கொண்டிருக்கும் அந்த நேரம் பார்த்து பணத்தை ஏமாற்றிய கதிரை பார்த்து விடுகிறார் ஏ கதிர் என்று மனோஜ் கத்த அவன் சுதாரித்துக் கொண்டு காரில் வேகமாக ஏறி சென்று விடுகிறான். மனோஜ் பின்னாலே துரத்திக் கொண்டு போக வழியில் இருப்பவர்களை மோதியும் தள்ளிவிட்டும் சென்று விடுகிறார் இதனால் அவர்கள் அனைவரும் மனோஜை துரத்தி வருகின்றனர்.
காரின் மீது கல்லை தூக்கி எறிய போக அது கான்ஸ்டபிள் மீது பட்டுவிடுகிறது. அந்தக் கதிர் காரில் தப்பித்து விட இவர்கள் அனைவரும் மனோஜை துரத்திக் கொண்டு வருகின்றனர். பயத்தில் ஓடி வந்த மனோஜ் எதிரில் வரும் வண்டியில் மோதி கண்களில் அடிபட்டு கீழே விழுகிறார். உடனே விஜயா வீட்டில் வழுக்கி விழுந்து மனோஜ் என கூப்பிடுகிறார்.
உடனே முத்து விஜயாவை தூக்க போக விஜயா முத்துவை தொட மறுக்கிறார். உடனே மீனா வர மீனா எழுப்பி விட பார்க்க மீனாவையும் தொட விருப்பம் இல்லாமல் அப்படியே உட்கார்ந்து இருக்க பிறகு ரவி வந்தவுடன் தூக்க சொல்லுகிறார். என்னம்மா ஆச்சு என்று கேட்க கால் தவறி விழுந்துட்டேன்னு சொல்ல ரவி சேரில் உட்கார வைத்து காலை பிடித்து விட அவரிடம் நன்றாக பேசுகிறார். உடனே வருத்தப்பட்ட முத்து கிச்சனுக்கு சென்று கீழே விழுந்துட்டாங்க ஆனா அவங்கள தூக்கி விட கூட என் கையை பிடிக்க மாட்டாங்க என்மேல இருக்கிற வெறுப்புதான் அங்கு வலியையும் மீறி இருக்கு என்று சொல்லி கண்கலங்க மீனா நீங்க புடிக்காத பையனா நான் பிடிக்காத மருமக ஒரு நாள் புரிய வைப்போம் என்று சொல்லி ஆறுதல் சொல்லுகிறார்.
ரவி காலை பிடித்து விட அந்த நேரம் பார்த்து போன் வருகிறது ரவியிடம் சொல்லி எடுத்துக் கொடுக்கச் சொல்ல அண்ணி தான் பண்றாங்க எனக்கு கொடுக்கிறார் பிறகு விஜயா எடுத்துப் பேச ரோகினி கண்கலங்கி அழுது கொண்டே இருக்கிறார் என்னாச்சும்மா என்று விஜயா பதறிப் போக மனோஜ் மனோஜ் என்று சொல்ல மனோஜ்க்கு என்ன ஆச்சு என்று கேட்க ஆக்சிடென்ட் ஆயிடுச்சு ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணி இருக்காங்க என்று அழுது கொண்டே சொல்லுகிறார். உடனே ரவி என்ன ஆச்சு என்று கேட்க மனோஜ்க்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சா என்று அழுது கொண்டே சொல்லுகிறார். விஜயா பேச முடியாமல் அழுது கொண்டே இருக்க ரவி போனை வாங்கி விசாரிக்கிறார் எந்த ஹாஸ்பிடல் என்று கேட்டுவிட்டு ஃபோனை வைக்க அந்த நேரம் பார்த்த அண்ணாமலை வருகிறார் விஜயா அழுது கொண்டே இருப்பதை பார்த்து அண்ணாமலை என்ன ஆச்சு என்று பதறிப் போய் கேட்க மனோஜ்க்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சு அதான் சொல்றாங்க என்று சொல்ல அவரும் கண்கலங்கி அழுகிறார்
பிறகு அனைவரும் ஹாஸ்பிடலுக்கு கிளம்ப மனோஜை அழைத்து வர அவர் கண்ணில் பெரியதாக கட்டு போட்டு இருக்கிறது. இதனால் ரோகிணி பதறிப் போய் எதற்கு இவ்வளவு பெரிய கட்டு போட்டு இருக்கீங்க என்ன ஆச்சு என்று கேட்க அவரோட கண்ணு கண்ணாடி உடைந்து உள்ள குத்தி இருக்கு. என்று சொல்ல அப்போ கண் பார்வைக்கு ஏதாவது பிரச்சனை இருக்குமா என்று சொல்லி அழுது கொண்டு கேட்கிறார் அவர் கான்ஷியஸ்க்கு வந்ததுக்கு அப்புறம் சில டெஸ்ட்களை எடுத்துட்டு அப்புறம்தான் சொல்ல முடியும் என்று சொல்ல அதற்கு பிறகு குடும்பத்தினர் வந்து விடுகின்றனர். அவர்கள் அனைவரும் மனோஜை பார்த்து கண் கலங்க வார்டுக்கு மனோஜ் அழைத்து செல்கின்றனர். முத்து அண்ணாமலைக்கு ஆறுதல் சொல்ல ரவி விஜயாவுக்கு ஆறுதல் சொல்லுகிறார் மீனா மற்றும் சுருதி இருவரும் ரோகிணிக்கு ஆறுதல் சொல்ல அவர்கள் அழுது கொண்டே இருக்கின்றனர்.
பிறகு முத்து மீனா தனியா உட்கார்ந்து கொண்டிருக்க மனோஜை துரத்திக் கொண்டு வந்தவர்கள் வருகின்றனர். அவர்களிடம் என்ன பேசுகின்றன? அதற்கு முத்து என்ன சொல்லுகிறார். என்பதை இன்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

The post விஜயாவால் வருத்தப்பட்ட முத்து, மனோஜ்க்கு நடந்த ஆக்சிடென்ட். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.