ARTICLE AD BOX
திண்டுக்கல், நாகல்நகர் பகுதியில் தேமுதிக கொடிநாள் வெள்ளி விழா, உலக மகளிர் தின விழா, பொது செயலாளர் பிறந்தநாள் விழா என முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். "பல முறை திண்டுக்கல் வந்துள்ளேன். திண்டுக்கல் என்றாலே அது கேப்டனின் கோட்டை, திண்டுக்கல்லுக்கு விஜயகாந்த் உடன் எப்போது வந்தாலும் மக்கள் வெள்ளத்தில் தான் சென்றுள்ளோம். தேர்தல் நேரத்திலும், பிரச்சாரத்திலும் கூட்டத்திற்கு சென்றாலும் விஜய்காந்த் எங்கும் செல்லவில்லை நம்முடன் தான் இருக்கிறார். விஜய்காந்த் மறைந்த போது கருடன் வட்டம் மிட்டது அதே போல விஜய்காந்த் நினைவகத்தில் தினமும் கருடன் வட்டம் மிடுகிறது.
மேலும் படிக்க | ரேஷன் கடைகளில் இனி 5 கிலோ கோதுமை கிடையாதா...? அதிர்ச்சி தகவல்!
திண்டுக்கல் என்றாலே பூட்டு மற்றும் பிரியாணி தான். இரண்டும் உலகம் முழுவதும் சென்று அடைந்துள்ளது. நமது கொடி கலரில் உள்ள சிவப்பு சாதி மதம் இல்லாமல் நமது இரத்தின் கலரை குறிக்கிறது. மஞ்சள் ஏழைகள் இல்லாத நிலை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. கருப்பு லஞ்சம், ஊழல், பெண் எதிரான குற்றத்தை தடுத்து நமது முடியின் நிறத்தை விஜய்காந்த் கொடுத்தார். தமிழ் மொழியில் மட்டுமே நடிப்பேன் என வாழ்ந்து காட்டியவர் விஜய்காந்த். மற்ற நடிகர்கள் தமிழ் மொழி மட்டும் இல்லை மற்ற மொழிகளிலும் நடிக்கின்றனர். அதே போல் கோக்க கோலா, நகை விளம்பரத்தில் அவர் நடித்தது இல்லை. அவருக்கு பல விளம்பரம் வந்தது என்பது எனக்கு தெரியும்.
விஜய்காந்த் ஒரு வயதில் தாயை இழந்தவர். அவருக்கு நான் தாயாக இருந்தேன். அவரை பேபி என அழைப்பேன். அவருக்கு அனைத்தும் நானே, எனக்கு எல்லாம் அவரே. அவருக்கு நான் தான் சாப்பாடு ஊட்டி விடுவேன். நடித்து முடித்து எத்தனை மணிக்கு வந்தாலும் இரவு முழுவதும் இருந்து சூடாக உணவு கொடுத்து தான் உறங்க செல்வேன். (என அவரைப் பற்றி பேசும்போது பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் விட்டு அழுதார்). நாம் ஆளும் கட்சி இல்லை. ஆண்ட கட்சியும் இல்லை. நோட்டை எடுத்து கொண்டு மிரட்டி பணம் வாங்கும் கட்சியா? இருந்தும் இன்று திண்டுக்கல் முழுவதும் நமது கொடியாக உள்ளது. விஜய்காந்த் பெண்களுக்காக பல உதவிகளை செய்தவர். மக்கள் விஜய்காந்த் தவற விட்டுவிட்டனர். அவர் பணம் புகழ் எல்லாம் இருந்தது மக்களுக்காக வாழ நினைத்தார்.
விஜய்காந்த் வெள்ளந்தியாக இருந்தார். அவரை நாம் தவர விட்டுவிட்டோம். நமக்கு நேரம் வரும் போது சொல்கிறேன். திண்டுக்கல் மாநகராட்சியில் மா இல்லை நகராட்சி மட்டும் தான் இருக்கிறது. திண்டுக்கல்லில் நெசவு தொழில் அதிகம் தற்போது ஸ்பின்னிங் மில் குறைந்து வருகிறது. சிறுமலையில் நடந்த வெடி குண்டு சம்பத்தை முடி மறைக்கிறது போலீஸ். அங்கு இந்த வெடி முழுமையாக வெடித்தால் சிறுமலை இருந்து இருக்காது. மாநகராட்சி பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து சிறுவர்கள் காயம் அடைந்தனர். நிதி இல்லை என கூறாமல் தமிழ்நாடு முழுவதும் பள்ளி கூடம் சரி செய்யப்பட வேண்டும். திண்டுக்கல்லில் எங்கு பார்த்தாலும் லாட்டரி விற்கபடுவதாக புகார் வருகிறது. மளிகை கடையிலும் லாட்டரி விற்கப்படுவதாக கூறுகின்றனர் இது தடுக்கப்பட வேண்டும்" என தெரிவித்தார்.
மேலும் படிக்க | இன்றே கடைசி நாள்.. பென்ஷன் வாங்கும் தமிழக ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ