விக்ரமின் "வீர தீர சூரன்" பட புரமோஷன் பணிகள் துவக்கம்!

17 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

'சேதுபதி, சித்தா' படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது. முதலில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, முதல் பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் மற்றும் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலாகின.தமிழ்நாட்டில் இப்படத்தின் திரையரங்க விநியோக உரிமையை 5 ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

படத்தைப் பார்த்த படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ், கமர்ஷியல் கல்ட் கிளாசிக்காக இப்படம் மாறும் என கருத்து தெரிவித்துள்ளனர். இப்படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், வீர தீர சூரன் படக்குழு புரமோஷன் பணிகளைத் துவங்கியுள்ளது. இதற்காக நடிகர்கள் விக்ரம், எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் மற்றும் இயக்குநர் சு. அருண்குமார் ஆகியோர் நேர்காணல்களை அளித்து வருகின்றனர்.

Namma #Kaali ready for March 27th Sambavam! #VeeraDheeraSooran promotions begins An #SUArunKumar Picture A @gvprakash musical Produced by HR Pictures @riyashibu_ @chiyaan @iam_SJSuryah #surajvenjaramoodu @officialdushara @thenieswar @editor_prasannapic.twitter.com/ysROgWnJjm

— HR Pictures (@hr_pictures) March 15, 2025
Read Entire Article