வாரம் ஒரு "நீண்ட" அறிக்கை.. ஆனால்.. விஜய் எடுத்த அரசியல் ரூட்.. ஆசையாக இருந்த ரசிகர்கள் அப்செட்?

12 hours ago
ARTICLE AD BOX

வாரம் ஒரு "நீண்ட" அறிக்கை.. ஆனால்.. விஜய் எடுத்த அரசியல் ரூட்.. ஆசையாக இருந்த ரசிகர்கள் அப்செட்?

Chennai
oi-Shyamsundar I
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் நடக்கும் பல்வேறு விஷயங்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் அறிக்கையாக கண்டித்து வருகிறார். ஆனால் அவரின் அறிக்கைகள், அவரின் சொந்த கட்சியினருக்கே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து 1 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. 1 வருட கொண்டாட்ட நிகழ்வுகளும் அரங்கேறிவிட்டன. ஆனால் விஜய் தொடர்ச்சியாக களத்திற்கு செல்லாமல் அறிக்கைகளை மட்டும் வெளியிட்டு வருகிறார். அவர் மீது முக்கியமான சில விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

tvk maanadu tamilaga vettri kazhagam

1. விஜய் அறிக்கை வெளியிடுகிறார்.. அதிலும் நீண்ட அறிக்கை வெளியிடுகிறார். அவரின் அறிக்கைகள் அவருடைய ஜென் இசட் ரசிகர்களுக்கு ஏற்றதாக இல்லை.

2. விஜய் புதிய அரசியல் மாடலை உருவாக்குவார்.. ரீல்ஸ், வீடியோ என்று சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அறிக்கை மட்டும் வெளியிடுகிறார். அதிலும் 2-3 பக்கங்களுக்கு எழுதுகிறார்.

3. இது விஜய் எழுதும் அறிக்கையா... அதாவது அவரின் வாய்சா.. அல்லது யாரவது எழுதிக்கொடுத்ததா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

4. பல்வேறு விவகாரங்களில் அறிக்கை வெளியிடும் விஜய்.. அது தொடர்பாக செய்தியாளர்களை சந்திக்கவில்லை. கடந்த 1 வருடத்தில் ஒரு முறை கூட விஜய் செய்தியாளர்களை சந்திக்கவில்லை.

5. விஜய் களத்தில் இறங்கி அதிரடியாக அடிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏதாவது பிரச்சனை வந்தால் அதற்கு ஒரு அறிக்கை விட்டுவிட்டு விஜய் அமைதியாக இருந்து விடுகிறார்.

6. அரசியல் செய்வது இவ்வளவு எளிமையானதா என்று சொல்லும் அளவிற்கு விஜய் அறிக்கையோடு நிறுத்திக்கொள்கிறார்.

பட்ஜெட்டிற்கும் கூட அறிக்கை

சமீபத்தில் பட்ஜெட்டையும் கூட விஜய் அறிக்கை மூலமே விமர்சனம் செய்து இருந்தார். முழு அறிக்கையில், தமிழ்நாடு அரசின் 2025-26 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் புதிதாக 9 இடங்களில் தொழிற்பேட்டை அமைக்கப்படும், பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை, ஈட்டிய விடுப்பு சரண் 15 நாட்கள் வரை பணப்பலன், பத்து லட்சம் வரை மதிப்புள்ள சொத்தைப் பெண்கள் பெயரில் பதிவு செய்தால் பதிவுத் தொகையில் சலுகை என்பது போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம்.

அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வருமா என்ற பலமான கேள்வி எழாமல் இல்லை. காரணம். இந்த விளம்பர மாடல் அரசின் கடந்த கால வெற்று விளம்பர அறிவிப்புகளே. புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்லூரிக் கல்வியின் தரத்தை நிலைநிறுத்த என்ன முன்னெடுப்புகளை எடுக்கப் போகின்றீர்கள்?

ஆசிரியப் பணி இடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு, வெற்றிடங்களை நிஜமாகவே நிரப்பும் அறிவிப்பா? இல்லை. வழக்கம் போலான விளம்பர மாடல் அரசின் வெற்று அறிவிப்பா? என்பது போகப் போகத்தான் தெரியும். அண்ணா பல்கலையைத் தரவரிசையில் மேம்படுத்தும் அறிவிப்பெல்லாம் இருக்கட்டும். முதலில், அண்ணா பல்கலையில் பயிலும் மாணவிகளுக்கு முறையான பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.

மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற தமிழ்நாட்டு அரசின் அறிவிப்பு குறித்து இந்த நிதி நிலை அறிக்கையில் விளக்கப்படவே இல்லை. மாறாக. மக்கள் நலன் சார்ந்த எந்த விளக்கமும் இல்லாமல் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பு. பரந்தூர் பகுதி விவசாயப் பெருங்குடி மக்களுக்குச் செய்யப்படும் துரோகமாகவே இருக்கும்.
விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை தேர்தல் வாக்குறுதியான கேஸ் மானியம் ரூ.100 வழங்கப்படும் என்பது என்ன ஆனது என்று தெரியவில்லை. அதே போல் பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு, வாக்குறுதியில் சொன்னது போல முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. மேலும், ரேஷனில் சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளும் என்ன ஆயின என்றே தெரியவில்லை.

பொதுமக்களை வெகுவாகப் பாதிக்கும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வசூலிக்கப்படும் மின்சாரக் டணம். மாதம்தோறும் செலுத்தக்கூடியதாக மாற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி என்ன ஆனதோ? வெற்று விளம்பர அரசுக்கே வெளிச்சம். அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் குடியிருப்புகள் கட்டுவது இருக்கட்டும். அரசு ஊழியர்களின் லட்சக்கணக்கான குடும்பங்கள் நலன் சார்ந்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் முக்கியக் கோரிக்கையான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்துவது. பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை.

More From
Prev
Next
English summary
Why is the Tamilaga Vetri Kazhagam party Vijay's way of doing politics not good?
Read Entire Article