ARTICLE AD BOX
தற்போது உள்ள கள்ளகட்டதில், பலர் இடுப்பு வலியால் அவதிப்படுகின்றனர். முன்பெல்லாம், வயது அதிகரிக்கும் போது தான் இடுப்பு வலி ஏற்பட்டது. ஆனால் தற்போது 30 வயது ஆகும் முன்பே இந்த இடுப்பு வலி வந்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடாமல், கண்ட உணவுகளை சாப்பிடுவது தான். இடுப்பு வலி சொல்வதற்கு சாதரணமாக இருக்கலாம், ஆனால் வந்தபிறகு, குனிந்தால் நிமிர கூட முடியாது.
இந்த பிரச்சனை பெரும்பாலும் பெண்களுக்கு இருந்தாலும் கூட, ஆண்கள் அதிக நேரம் வேலை செய்யும் இடத்தில நிற்பதாலும், அதிக நேரம் வாகனங்களை ஓட்டுவதாலும் இடுப்பு வலி ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சனைகுக்கு நாம் விளம்பரங்களை நம்பி கண்ட மருந்தை வாங்கி பூசுவதால் எந்த பயனும் இல்லை. ஏனென்றால், இது போன்ற வலிகள் எலும்பு பெலவீனத்தால் ஏற்படுகிறது. இதனால் வெளியே மருந்து தடவுவதால் எந்த பயனும் இல்லை.
இது போன்ற இடுப்பு வலி, மூட்டு வலி போன்ற வலிகளுக்கு இருக்கும் ஒரே தீர்வு எலும்புகளை வலுப்படுத்துவது தான். அந்த வகையில், எலும்பை வலுப்படுத்த, உளுந்தை விட சிறந்த மருந்து ஒன்று கிடையாது. நமது முன்னோர்கள் உளுந்து களி, உளுந்து கஞ்சி ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டதால் தான் அவர்கள் 90 வயதிலும் நன்கு வேலைகளை செய்தனர். இதனால், நாகரீகம் என்ற பெயரில் கண்ட உணவுகளை சாப்பிடாமல் உளுந்தினை களி அல்லது காஞ்சி செய்து சாப்பிடுவதால் எலும்புகள் பெலன் அடையும்.
இது உணவாக மட்டும் இல்லாமல், ஷாம்புவாகவும் பயன்படுத்தலாம். ஆம், இதற்கு உளுந்தினை அரைத்து ஷாம்புவிற்கு பதிலாக தலையில் தேய்த்துக் குளிக்கலாம். இதனால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி ஏற்படும். எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் உளுந்தினை அடிக்கடி எடுத்துக் கொண்டால் கட்டாயம் விரைவில் குணமாகும். ஆண்மை குறைவு உள்ளவர்கள், தொடர்ந்து உளுத்தம் கஞ்சி அல்லது உளுந்து களி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இப்படி உளுந்தினை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொண்டால், இடுப்பு வலி மட்டும் இல்லாமல் எந்த வலியும் வராது..
Read more: திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லையா? கவலையே வேண்டாம், இந்த பருப்பை அடிக்கடி சாப்பிடுங்க..
The post வாரம் 2 முறை இதை சாப்பிடுங்க, இடுப்பு வலி மட்டும் இல்ல, எந்த வலியும் வராது!!! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.