ARTICLE AD BOX
வார ராசி பலன்: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியினருக்கான பலன்கள் பரிகாரங்கள்?.. முழு விவரம் இதோ
வார ராசி பலன்: மார்ச் 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை பங்குனி மாதம் நடைபெறவுள்ளது. அந்த வகையில், பங்குனி மாதத்தில் மார்ச் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும், எந்த தெய்வங்களை வழிபட வேண்டும், பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
மார்ச் மாதத்தில் ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். இந்த கிரகங்களில் பெயர்ச்சி மற்றும் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் ஒவ்வொரு ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில், மார்ச் மாதத்தில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனி பகவான் சில ராசிகளுக்கு அபரிமிதமான நல்ல சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் தரப்போகிறார். மாதத்தில் சிறந்த மாதமான பங்குனி மாதம் தற்போது தொடங்கியுள்ளது. பங்குனி மாதத்தில் மார்ச் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் ராசி: மேஷ ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக அனுமன் வழிபாடு பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றத்தைத் தரும். பயணம், அனுகூலம், புதிய ஒரு அனுபவம், சந்தோஷம், காதல் அமைப்பில் அனுகூலங்கள் காணப்படும். வயதானவர்களாக இருந்தாலும் நிறைய விஷயங்களில் சாதகமான அமைப்பு உண்டாகும். தொழில் ரீதியாக பதட்டம் படிப்படியாகக் குறையும். பணத்தை சுப விரையத்துக்காக செலவு செய்வீர்கள்.
அதற்கேற்ப பண வரவு நன்றாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம், அனுகூலம் உண்டாகும். நல்ல திட்டமிட்டு செய்யக்கூடிய விஷயங்களில் மிகப்பெரிய ஏற்றத்தை தரும். நிதானமாக யோசித்து செயல்பட்டால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வயிறு சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சரியான நேரத்தில் சாப்பிடுவது நல்லது. வெளியூர் பயணம் செல்வது நல்லது. தொழில் ரீதியாக திட்டமிட்டு செயல்பட்டால் நன்மை உண்டாகும்.
இளம் வயது மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல விஷயங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் புதிய வரவுகள் உண்டாகும். பிள்ளைகளுக்காக படிப்பு, தொழில், வியாபாரம், பயணங்கள், சுற்றுலாவுக்காக செலவுகளைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஆத்ம ரீதியான அனுகூலம் ஏற்படும். செல்வாக்குகள் படிப்படியாக கூடும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
எதிர்பார்க்காத இடங்களில் இருந்து அனுகூலம் காணப்படும். தொடர்ச்சியாக இருந்து வந்த மனத்தாங்கள்கள் தீரும். நம்பிக்கை ஏற்படும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இழுபறியான பிரச்சனைகள் தீரும். வண்டி, வாகனம் வாங்குவது விற்பது போன்ற விஷயம் அதிக சந்தோஷத்தை தரும். மனதில் இருந்து வந்த பலவிதமான கஷ்டங்கள் தீருவதால் எல்லாவிதத்திலும் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் ஆச்சரியம் ஏற்படும். நல்ல காரியங்கள் கை கொடுக்கக்கூடிய வாரமாகவும், பயணங்கள் அதிகரிக்கக்கூடிய வாரமாகவும் இருக்கும்.ல
ரிஷபம் ராசி: முதுகு, கழுத்து, கழிவுப் பாதையில் சிறு பிரச்சனைகள் பெரிதாகும் வாய்ப்பு உண்டு. விஷ்ணு வழிபாடு, விஷ்ணு சகஸ்கரநாமம் கேட்பது விசேஷம். அமோகமான காலகட்டமாக இருக்கம். பண வரவு ஏற்படும். அனைத்துவிதமான அனுகூலங்களும் ஏற்படும். தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். மானசீகமாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தொழில் ரீதியாக அனுகூலம் காணப்படும்.
வியாபாரத்தில் பெரிய முதலீடு கிடைக்கும். பண வரவில் இழுபறியாக இருந்து வந்த நிலைமை ஆச்சரியத்தக்க முன்னேற்றத்தை தரும். முதலீடுகளுக்கு குறை இருக்காது. பிள்ளைகள், படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம், துணை, பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றித் தருவீர்கள். இடமாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம், வீடு மாற்றம் ஆகியவற்றை ஜென்மத்தில் இருக்கக்கூடிய குரு உங்களுக்கு செய்து கொடுப்பார்.
தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நீங்களே மருத்துவம், மருந்து எடுத்துக் கொண்டால் மாட்டிக் கொள்வீர்கள். மருத்துவர்கள் ஆலோசனை பெறுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம். எதிரிகள் திடீரென பலம் பெறுவார்கள். யார் பற்றி பேசும்போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெண்கள் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. எல்லோரும் ஒன்றாக சேர்ந்து உங்களுக்கு எதிராக திரும்புவார்கள்.
யாரையும் நம்பிப் பேசுவதை தவிர்க்க வேண்டும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றுவீர்கள். நினைத்த காரியங்கள் நடக்கும். தொழில் ரீதியாக நல்ல மாற்றம் உண்டாகும். பதவி உயர்வு சம்பள உயர்வு தடைகள் நீங்கும். மேலதிகாரிகள் உங்களுடைய படைப்புகளைப் பாராட்டுவார்கள்.
மிதுனம் ராசி: துர்க்கை வழிபாடு உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். ரத்த நாளங்கள், ரத்த ஓட்டங்களில் தடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்ல பலன்களைத் தரும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஓராண்டாக தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் இந்த வாரத்தில் தீரும். உத்தியோகத்தில் மாற்றம் உண்டாகும்.
வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். அரசுத் துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிர்ஷ்டம் உண்டாகும். ஆத்ம ரீதியான நம்பிக்கை ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு உண்டாகும். வியாபாரம், தொழிலில் அதிக ஏற்றம் உண்டாகும்.
யோக பலத்தை அதிகம் பெறும் ராசிக்காரர்கள் நீங்கள். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த நிலைமை படிப்படியாக மாறும். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். சோம்பல் அதிகமாக இருக்கும். அதில் கவனமாக இருப்பது நல்லது.
பசு மாட்டுக்கு சனிக்கிழமையில் உணவளிப்பது சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்யும். உத்தியோக ரீதியாக பயணம் செய்வது நல்லது. சுப காரியத் தடைகள் நீங்கும். பங்குனி மாதத்தில் சுப காரியப் பேச்சுகளைத் தொடங்கலாம். அனுகூலமான காலகட்டமாக ிருக்கும்.
- 1000 சவரன் தங்கம், உயில் சொத்துகள்.. அன்னை இல்லம் வீட்டு சாப்பாடு.. சிவாஜி அப்பாவுக்கு உதவபோவது யார்
- கதறும் வால் ஸ்ட்ரீட்! அமெரிக்காவே நடுங்குது! அடுத்து இந்தியா, இங்கிலாந்துதான்! டிரம்ப்பால் வந்த வினை
- மும்மொழி சர்ச்சை: ஓபன் சவால் விடுகிறேன்.. பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்க்கு பிடிஆர் சேலன்ஞ்!
- 100 வருடங்களில் இல்லாத மிக மோசமான சம்பவம் நடக்க போகுது.. உஷார்.. Rich Dad Poor Dad ஆசிரியர் வார்னிங்
- பிறந்தமேனியாக ஜோதிடரை நிற்க வைத்து, பக்கத்தில் நின்ற பெண்.. தங்க நகைகள் வேற.. நம்பவே முடியாத ட்விஸ்ட்
- பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிந்தால்.. பதிவு கட்டணம் குறைக்கப்படும்! தமிழக அரசு அறிவிப்பு
- அமெரிக்காவின் ஹெல்த்கேர் சிஸ்டமே அழிய போகுது.. இந்தியாவை சீண்டி சூடு போட்டுக்கொண்ட டிரம்ப்.. தேவையா?
- நேரடியாக வங்கி கணக்கிற்கே வரும் ரூ.50000 + ரூ.7000.. பட்ஜெட்டில் தங்கம் அறிவிப்பு.. யாருக்கு பலன்?
- பயணிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய ரயில்வே.. வைகை, பல்லவன் எக்ஸ்பிரசில் வந்த மாற்றம்
- பழைய ஓய்வூதிய திட்டம் எங்கே? பட்ஜெட்டால் கடுகடுப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அடுத்து என்ன?
- ஆதார் அட்டை வைத்துள்ளோருக்கு அறிவிப்பு.. ஆதார் புதிய பதிவிற்கு விலக்கு! வேலூரில் 7 மையங்களில் அதிரடி
- சிறகடிக்க ஆசை: மீனாவிடம் சிந்தாமணியின் கணவர் சொன்ன வார்த்தை.. விஜயாவை மாட்டி விட்ட முத்து.. செம சம்பவம்