வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை…. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

4 hours ago
ARTICLE AD BOX
gold price

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,210க்கும், சவரன் ரூ.65,680க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் ஏறுமுகத்திலிருந்த தங்கம் வாரத்தின் முதல் நாளிலேயே விலை சற்று சரிவைக் கண்டுள்ளது நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

அதேநேரம், வெள்ளி விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று (மார்ச் 17) காலை வர்த்தகப்படி கிராம் ஒன்றுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.113க்கு விற்பனையாகிறது. இது வரலாறு காணாத புதிய உச்சமாகும். இதனால், பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.1,13,000க்கு விற்பனையாகிறது.

கடந்த 1ஆம் தேதி ஒரு கிராம் வெள்ளி ரூ.105க்கு விற்பனையான நிலையில், 17 நாள்களில் கிராமுக்கு 8 ரூபாயும், கிலோவுக்கு ரூ.8,000 ரூபாயும் உயர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது.

மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ. 8,956-க்கும், ஒரு சவரன் ரூ.71,648-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read Entire Article