நீல் நிதின் முகேஷ்

தமிழ் படங்களில் இந்தி வில்லன்களுக்கு பெரியளவில் வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் விஜயின் கத்தி படத்தில் வில்லனாக அறிமுகமானார் நடிகர் நீல் நிதின் முகேஷ். இந்த படத்தில் ரசிகர்கள் அவருக்கு பெரியளவில் வரவேற்பு கொடுத்தார்கள் என்றாலும் அடுத்தடுத்த தமிழ் படங்களில் அவருக்கு வாய்ப்பு வரவில்லை. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பட வாய்ப்பில்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்

"வாய்ப்பு கேட்டு அலைகிறேன்" - நீல் நிதின்

" உங்களுக்கு லாபம் எடுத்து தர மாட்டார் என்பதற்காக ஒரு நடிகர் ஹிட் படம் கொடுக்க முடியாது என்றில்லை. ஒரு நடிகர் எப்போதும் நடிகர் தான். சூரியன் ஒரு நாள் மறைந்தாலும் அடுத்த நாள் உதயமாகிறது. அதே மாதிரி ஒரு நடிகர் நிச்சயமாக மேலே வருவார். அதற்கு அவனை சரியான ஆட்கள் ஆதரிக்க வேண்டும் , அவனுக்கான நேரம் வர வேண்டும். படம் ஹிட் ஆக வேண்டும் . கடந்த இருபது ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து வந்தாலும் இன்னும் நான் ஜீரோவில் இருந்துதான் தொடங்குகிறேன். தினமும் எனக்கு தெரிந்தவர்களுக்கு ஃபோன் செய்து ஏதாவது படம் வாய்ப்பு இருந்தால் கேட்கிறேன். அவர்களும் உடனே உங்களை நாங்கள் மைண்டில் வைத்துக் கொள்கிறோம் ஏதாவது வாய்ப்பு வந்தால் சொல்கிறோம் என்று பதிலளிக்கிறார்கள். எனக்கு தெரிந்த நிறைய பேர் எனக்கு பதிலளிக்காமல் தவிர்த்து வருகிறார்கள். நான் ஒருத்தன் இருக்கிறேன் என்பதை தொடர்ச்சியாக அவர்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறேன். கஷ்டப்படுவது தான் வாழ்க்கை என்பதை நான் ஏற்றுக் கொண்டுவிட்டேன். நல்ல பட வாய்ப்புகளுக்காக நான் பசியோ இருக்கிறேன். " என நீல் நிதின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : தினமும் வெறும் 7 நிமிடங்கள் தியானம் ...சத்குரு வெளியிட்ட புதிய ஆப்..15 மணி நேரத்தில் 10 லட்சம் டவுன்லோட்ஸ்

1987 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீல் நிதில். கடந்த 30 ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் இருந்து வரும் இவர் இயக்குநர், நடிகர் என இந்தி சினிமாவில் பல முயற்சிகளை செய்துள்ளார்.