ARTICLE AD BOX
வாயை திறந்து தூங்கினால் நீங்கள் மூக்கு வழியாக சுவாசிக்காமல் வாய் வழியாக சுவாசிக்கிறீர்கள் என்று அர்த்தம். நீண்ட நேரம் வாய் வழியாக சுவாசிப்பது உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும். இப்படி தூங்குவதால் நல்ல தூக்கம் கிடைக்காது. போதுமான காற்று உடலுக்கு கிடைக்கவில்லை என்றால் இதயம், நுரையீரல் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறையும். வாய் வறட்சி, குரலில் கரகரப்பு போன்ற சிக்கல்கள் தோன்றும். இது போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.