ARTICLE AD BOX
மகாராஷ்டிரா மாநிலம் பூனைவை சேர்ந்த 27 வயதான சுற்றுலா ஷிவானி என்பவர் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு வானில் பறக்கும் பாராக்ளைடரில் பறக்க திட்டமிட்ட அவர் கோவாவில் உள்ள நிறுவனம் ஒன்றை தொடர்பு கொண்டார். இதனையடுத்து ஷிவானி பயிற்சியாளர் சுமல் என்பவருடன் பாராக்ளைடரில் பறந்துள்ளார். ஆனால் அவர்கள் பறந்த சிறிது நேரத்திலேயே கயிறு அறுந்து கேரி என்கிற கிராமம் அருகே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் இருவரின் சடலங்களையும் மீட்டு விசாரணை நடத்தியுள்ளனர். அதில் பாராஸ்லைட்டிங் சேவை வழங்கிய நிறுவனம் அனுமதியின்றி இயங்கியது தெரிய வந்துள்ளது. மேலும் மனித உயிருக்கு ஆபத்து விளைவித்ததற்காக அந்த நிறுவன உரிமையாளர் சேகர் என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.