வாந்தி எடுத்த நந்தினி, சந்தோஷத்தில் துள்ளி குதித்த சூர்யா,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

4 hours ago
ARTICLE AD BOX
Moondru Mudichu Serial Today Promo Update 19-03-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 19-03-25Moondru Mudichu Serial Today Promo Update 19-03-25

நேற்றைய எபிசோடில் ரேணுகா வேண்டுமென்றே கல்யாணத்திடம் மாதவி அம்மாவும் அசோகன் சாரும் இப்படி பண்ணி இருக்கக்கூடாது என்று சூர்யா காதில் விழும் படி பேசுகிறார். உடனே கல்யாணம் இதெல்லாம் கண்ணும் காணாத போயிடனும் என்று சொல்ல ஏதோ சூர்யா சாரா இருப்பதனால் அடிதடி இல்லாம இருக்கு வேற ஏதாவது வீடா இருந்தா இந்நேரம் எவ்வளவு பிரச்சனை ஆயிருக்கும் தெரியுமா என்று சொல்லுகிறார். ஆனால் சூர்யா சார் இப்படியே பண்ணா தப்பு செஞ்சவங்களுக்கு குளிர் விட்டு போயிடும் என்று சொல்லி இன்னும் வெறுப்பேற்றுகிறார்.

மறுபக்கம் ரூமில் அசோகன் மாதவி இருவரும் உட்கார்ந்து கொண்டிருக்க சுரேகா நீயும் மாமாவும் எனக்கு தெரியாம இவ்ளோ பெரிய வேலை பார்த்து இருக்கீங்க என்கிட்ட எதுவுமே சொல்லல என்று சொல்ல அப்படி எல்லாம் எதுவும் இல்லை எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் நானே சொல்லி இருப்பேன் என்று சொல்ல, நீ சமாளிக்காதகா மாமா மாட்னதுனால தெரிஞ்சது இல்லன்னா ரெண்டு பேரும் சேர்ந்து மறைச்சுக்கிட்டு இருப்பிங்க அப்படித்தானே என்று கேட்கிறார். தங்க காசு இருக்கிற கிப்ட் பாக்ஸ வீட்டுக்கே கொடுத்துவிட சொன்ன அறிவாளி யார் என்று கேட்க அவங்களே அனுப்பும்போது நான் என்ன பண்ண முடியும் என்று கேட்கிறார் மாதவி.

இது மட்டும் இல்லாம லெட்டர் வேற என்று சுரேகா சொல்ல, மாதவி ஏதாவது ஒரு ஐடியா கொடுடி அப்பாவும் சூர்யாவும் எங்க மேல ரொம்ப கோவமா இருக்காங்க என்று சொல்ல, சூர்யா கோபத்தில் இருக்கும்போது நீ சரி பண்ண என்ன பண்ணாலும் அவன் இன்னும் கோபப்படுவான் என்ன நடந்தாலும் யார் என்ன பேசினாலும் அமைதியாக இருக்கிறது தான் இப்பத்திக்கு நல்லது என்று சொல்லுகிறார். சூர்யாவை இப்படியே விடக்கூடாது அவன் இந்த விஷயத்தை மறக்கணும் என்று அசோகன் சொல்ல மறக்க கூடிய விஷயமாக பண்ணிருக்கீங்க என்று சொல்லிவிட்டு, என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு நான் சொல்றதை கவனமா கேளுங்க என்று சுரேகா இருவரிடம் ஐடியாவை சொல்லுகிறார்.

உடனே இப்படி பண்ணா நீங்க வீட்டை விட்டு போக மாட்டீங்க இதை விட்டா வேற வழியே கிடையாது என்று சொல்ல அப்போ இதை பண்ணா நாங்க வீட்ட விட்டு போக மாட்டோமா என்று மாதவி கேட்க அந்த அளவுக்கு நீங்க பெர்பார்மன்ஸ் பண்ணனும் என்று சுரேகா சொல்லுகிறார். பிறகு மூவரும் ரூமில் இருந்து கிளம்ப சூரியா டென்ஷன் ஆகி உள்ளே வந்து வீட்டில் இருக்கும் அனைவரையும் கூப்பிட சொல்லுகிறார். அருணாச்சலத்திடம் நம்ம கம்பெனியில் நான் யார் என்று கேட்க ஒன் ஆப் தி சார்மேன் என்று சொல்லுகிறார். எனக்கு இருக்கிற பவரை வைத்து நான் ஒரு சில முடிவு எடுக்க போறேன் அதுக்காக தான் உங்கள வர வச்சிருக்கேன். உங்க மாப்பிள்ளை உங்க திருடன் இந்த ஆளு செஞ்ச துரோகத்துக்கு எந்த தண்டனை வேண்டுனாலும் கொடுக்கலாம். செஞ்ச துரோகத்தை என்னால மன்னிக்கவும் முடியாது மறக்கவும் முடியாது என்று சொல்லுகிறார். உடனே அசோகன் பெயரை சொல்லி இந்த நிமிஷத்திலிருந்து இந்த திருடனுக்கும் கம்பெனிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று சொல்லுகிறார்.

ஆனால் அருணாச்சலம் என்னதா இருந்தாலும் அவர் உன்னோட அக்கா வீட்டுக்காரர் என்று சொல்ல அந்த ஒரு காரணத்துக்காக தான் நான் இன்னும் போலீஸ் ஸ்டேஷன் போகாம இருந்திருக்கேன் இல்லனா இங்க நடக்கிறதே வேற என்று சொல்லுகிறார். அசோகன் சூர்யாவிடம் வேலை விட்டலாம் தூக்கிடாத மாப்பிள்ளை என கெஞ்ச, சூர்யா இன்னும் கோபப்படுகிறார். அவர்தான் கெஞ்சுராருல என்று அருணாச்சலம் சொல்ல எனக்கு இவர் மட்டும் தனியா செஞ்சி இருப்பார் என்று எனக்கு தோணல அவர் பொண்டாட்டியும் சேர்ந்து தான் செஞ்சி இருப்பாங்க என்று சொல்லுகிறார். உடனே சுரேகா சூர்யா நீ கில்லாடி இவ்வளவு கரெக்டா எப்படி கண்டுபிடிக்கிற என்று மனதில் நினைக்க சூர்யா இவர்கள் இருவரையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்லுகிறார்.

எங்களை இன்னும் நாலு அடி கூட அடி சூர்யா வீட்டை விட்டு வெளியே போக சொல்லாத வெளியே போக சொன்னா நாங்க எங்க போவோம் என்று கேட்க அதை போய் உன் புருஷன் கிட்ட கேளு இன்னும் உங்களை இந்த வீட்ல விட்டா கம்பெனி சீக்ரெட் எல்லாம் வெளியே சொல்ல மாட்டீங்கன்னு என்ன நிச்சயம் உன்ன எல்லாம் நான் மன்னிக்கவே மாட்டேன். ரெண்டு பேரும் வெளியே போங்க என்று சொல்ல மாதவி சூர்யாவிடம் கையைப் பிடித்து கெஞ்சுகிறார். சூர்யா கையை தட்டி விட மாதவி அருணாச்சலத்திடம் போய் கெஞ்சுகிறார் சரி இந்த ஒருவாட்டி மன்னிச்சிடு சூர்யா என்று சொல்ல இவங்க பண்ணது துரோகத்தோட உச்சம் என்று சொல்லுகிறார். நான் பிசினஸ்ல எவ்வளவு நாள் கழிச்சு இறங்கி இருக்கேன் நீங்களே சந்தோஷப்பட்டீங்க அதுல இவங்க இவ்வளவு பெரிய கேவலமான வேலை பார்த்துகிட்டு இருக்காங்க. கூடவே இருந்து துரோகியா இருந்திருக்காங்க என்று சொல்லுகிறார். சுரேகா நம்ம அக்கா தான் அண்ணா கொஞ்சம் யோசிச்சு பாரு என்று சொல்ல இதுக்கு மேல எதுவும் யோசிக்கறதுக்கு இல்ல வெளிய போக சொல்லுங்க டாடி என்று சொல்லுகிறார்.இந்த மூஞ்சிய பாத்தாலே எனக்கு கோபமா வருது என்று சொல்லுகிறார்.

அதற்கு அருணாச்சலம் உன்ன விட எனக்கு அதிகமா கோபம் வருது அதுக்காக வீட்டை விட்டு வெளியே போக சொல்றது தப்பு சூர்யா என்று சொல்லுகிறார். நீ உள்ள போ என்று அனுப்ப நான் உள்ள போறேன் ஆனா அதுக்கு முன்னாடி இவங்க வெளியே போகணும் என்று சொல்லுகிறார். என்ன ரொம்ப யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க அவங்க இருக்கட்டும் நான் போறேன் வா நந்தினி என கூப்பிட்டு வீட்டை விட்டு வெளியே வருகிறார். பிறகு குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பின்னாலேயே கெஞ்சி கொண்டு ஓடி வர இவ்வளவு நாளா இந்த கம்பெனிக்கு உழைத்திருக்கேனே என்று அசோகன் சொல்ல அதுதான் எல்லாத்தையும் செஞ்சுட்டு ஒரு பாட்டில் விஷத்தை கலந்துட்டியே என் மூஞ்சிலேயே முழிக்காத என்று சொல்ல மாதவி சூர்யாவின் காலில் விழுந்து மன்னிக்குமாறு கெஞ்சுகிறார். போறதுக்கு முன்னாடி ஒரு உண்மையை மட்டும் சொல்லிவிட்டு போறேன் என்று சொல்லுகிறார். உடனே சூர்யாவிற்கு நாட்டு மருந்து கொடுத்ததிலிருந்து அவன் உயிருக்கு ஆபத்து இருக்குன்னு எல்லாருக்குமே தெரியும்ல்ல, அதிலிருந்து எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. இந்த டெண்டர் விஷயத்துல விட்டுக் கொடுக்கலைன்னா சூர்யாவிற்கு தான் ஆபத்து என்று மிரட்டியதாகவும் அதனாலதான் அவர் அது மாதிரி செஞ்சாரு. அந்த நேரத்துல உன்னோட உயிரை காப்பாத்த அவருக்கு வேற வழி தெரியல அதனாலதான் இந்த கேவலமான வேலையை அவரு செஞ்சாரு இப்ப கூட அவரு சொல்ல வேணாம்னு தான் சொன்னாரு நான் வேற வழி இல்லாம தான் சொல்றேன் என அழுது நாடகம் ஆடுகிறார்.

எங்கள பொறுத்த வரைக்கும் நீ நல்லா இருந்தா போதும் என்ன எங்கள பத்தி கடைசி வரைக்கும் தப்பா நெனச்சிடுவேன்னு பயந்தோம் ஆனால் இப்போ உண்மைய சொல்லிட்டோம் இப்ப என்ன போகணும் அவ்வளவுதானே நாங்க போறோம் என்று சொல்லுகிறார். உடனே அசோகனும் இதுக்கு மேல கொஞ்சம் உஷாரா இருங்க என்று சொல்லிவிட்டு, வா மாதவி நம்ம போகலாம் என்று அசோகன் சொல்ல அருணாச்சலம் நீங்க ரெண்டு பேரும் உள்ள போங்க என்று சொல்லுகிறார். அருணாச்சலம் அதுதான் அவங்க சொல்றாங்க இல்ல விடு சூர்யா என்று சொல்ல இதுதான் உண்மை என்றால் தங்க காசு வந்தபோது சண்டை போட்டேன் இல்ல அப்பவே சொல்லி இருக்க வேண்டியதுதானே? எல்லா நாடகம் அதுக்குள்ள யோசிச்சி இருப்பாங்க என்ன சொல்லலாம்னு என்று சொல்லுகிறார். அந்தப் பதற்றத்தில் சொல்லி இருக்க மாட்டாங்க என்று சொல்ல மாதவி விடுங்கப்பா நாங்க இங்க இருந்து போறோம் என்று சொல்ல, சூர்யாவிடம் பேசி மாதவியை உள்ள போக சொல்லிவிட்டு அனைவரும் உள்ளே போக, அசோகன் சூர்யாவிடம் உனக்கு நான் என்னைக்குமே துரோகம் பண்ண மாட்டேன் மாப்பிள்ளை நீ அதை புரிஞ்சிப்ப என்று அழுது கொண்டே சொல்லிவிட்டு சென்று விடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி வாந்தி எடுக்க சூர்யா இவ்வளவு சீக்கிரம் நம்ம அப்பா அம்மா ஆவோம் என்று நான் நினைக்கவே இல்ல என்று சொல்லி சந்தோஷப்பட்டு சுந்தரவள்ளியை வெறுப்பேத்துகிறார். இவ கர்ப்பமா இருக்குற விஷயத்தை அர்ச்சனா அம்மாகிட்ட சொல்லணும் என ரேணுகா நினைக்கிறார்.

டாக்டரிடம் நந்தினியை அழைத்துச் செல்ல மறுப்பக்கம் சுந்தரவல்லி இந்த குழந்தையை மட்டும் இவ பெத்துட்டானா நான் நெனச்சாலும் இந்த வீட்டில் இருந்து அவளை அனுப்ப முடியாது என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update 19-03-25Moondru Mudichu Serial Today Promo Update 19-03-25

The post வாந்தி எடுத்த நந்தினி, சந்தோஷத்தில் துள்ளி குதித்த சூர்யா,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article